Saturday, October 1, 2011

சுமை அதிகரிக்காத வகையில் அரச நிறுவனங்கள் இயங்க வேண்டும்-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

Saturday, October 01, 2011
சுமை அதிகரிக்காத வகையில் அரச நிறுவனங்கள் இயங்க வேண்டும்-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

மக்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்கும் அதேவேளை அரச செலவீனத்தின் சுமை அதிகரிக்காத வகையில் அரச நிறுவனங்கள் இயங்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கிறார்.

அரச நிறுவனங்களின் அதிகாரிகள் தங்கள் பதவி மற்றும் பொறுப்புகளை நன்குணர்ந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற, அடுத்த வருடத்திற்கான வரவு - செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு முன்னோடியாக நிதி அமைச்சின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தின்போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

பல்வேறு காப்புறுதி முறைகளில் நிலவுகின்ற பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதுடன் வலுவான கட்டமைப்பு கொண்ட காப்புறுதி முறைமையொன்றை நடைமுறைப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்

No comments:

Post a Comment