Pages

Saturday, October 1, 2011

பிறந்தநாள்: சிவாஜி சிலைக்கு மாலை அணிவிப்பு!

Saturday, October 01, 2011
நடிகர் சிவாஜி கணேசனின் 83-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. சிவாஜி வீட்டில் உருவ படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. சிவாஜி மகன் ராம்குமார், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், கே.வி.பி. பூமிநாதன் மற்றும் சிவாஜி ரசிகர்கள் பலர் மாலை அணிவித்தனர்.

சிவாஜி மன்ற மாவட்ட தலைவர் மஸ்தான், சூளை ராஜேந்திரன் ஆகியோர் அன்னதானம் வழங்கினார்கள். கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்தனர்.

ராம்குமார், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நிர்வாகிகள் சாகுல்அமீது, தடா சந்திரசேகர், கலைக்கோட்டுதயம், அய்யநாதன், செல்வராஜ், ஆவல் கணேசன், தங்கராசு, அன்பு தென்னரசன் ஆகியோரும் மாலை அணிவித்தனர்.

சிவாஜி ரசிகர் மன்றத்தினரும் மாலை அணிவித்தார்கள். சத்தியமூர்த்தி பவனில் சிவாஜி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சிவாஜி உருவப்படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மாலை அணிவித்தார். எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், ஆர். தாமோதரன், கொண்டல்தாசன், கே.ஏ.பி. பாலு, அகரம் கோபி, புல்லட் சாகுல், குணசேகரன், தமிழ் செல்வன், சிவாஜி மன்ற தலைவர் பூமிநாதன் ஆகியோரும் மாலை அணிவித்தனர்.

No comments:

Post a Comment