Friday, April 24, 2020

கொரோனாவை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு ஏற்படும் நிதி பற்றாக்குறை!

 கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் மையமாக மாறியுள்ள அமெரிக்காவில் இதுவரை, 8.90 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 50,363 பேர் உயிரிழந்துள்ளனர். 82,112 பேர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக, அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, அமெரிக்காவில் ஊரடங்கு அமலி
ல் உள்ளது. அனைத்து தொழிற்சாலைகளும், தொழில்நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன; பல கோடி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். கொரேனாவை எதிர்கொள்ளவும், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார

இழப்புகளை ஈடுசெய்யவும், வேலை இழந்த தொழிலாளர்களுக்கு உதவவும் கடந்த மாதம் அமெரிக்க வரலாற்றிலேயே அதிகபட்சமாக இரண்டு டிரில்லியன் (இரண்டு லட்சம் கோடி) டாலர் மதிப்பிலான, பொருளாதார உதவி நிதித் தொகுப்புக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் நேற்று (23ம் தேதி) மேலும், 484 பில்லியன் (48,400 கோடி) அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிவாரணத் தொகுப்புக்கு, அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா உண்டாக்கிய பொருளாதார பாதிப்புகளை ஈடுசெய்ய, அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நான்காவது நிதி மசோதா இது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பெருந்தொற்றை சமாளிக்கவும் பொருளாதார இழப்பை ஈடுசெய்யவும் இதுவரை, சுமார் 3 டிரில்லியன் டாலர் (3 லட்சம் கோடி) அளவுக்கு நிவாரண உதவிகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்க அரசின் நிதிப் பற்றாக்குறையை, வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்கச் செய்யும்' என, பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

2 comments:

  1. very interesting , good job and thanks for sharing such a valuable topic.
    Get Complete Call Center Solutions & boost your call center's performance.
    We offer Call Center Solutions based on your needs.

    ReplyDelete