Monday, April 27, 2020

கோவையில் இருந்து நேற்று 113 பேர் இலங்கை பயணம்!

முழு ஊரடங்கு காரணமாக, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் மீண்டும் தங்கள் நாட்டுக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இச்சூழலில் இலங்கையை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் உட்பட, நுாற்றுக்கும் மேற்பட்டோர் தமிழகம், கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் தங்கியிருப்பது தெரிந்தது. இவர்கள் தங்களின் சொந்த நாட்டுக்கு அழைத்
து செல்லுமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, இலங்கையில் இருந்து, 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானம் கோவை சர்வதேச விமான நிலையம் வந்தது. இந்த விமானத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட, 113 பேர் நேற்று

இலங்கைசென்றனர். ஊரடங்கு உத்தரவுக்கு பின், கோவையில் இருந்து, முதல் முறையாக சர்வதேச
விமானம் இயக்கப்பட்டது.

No comments:

Post a Comment