Thursday, November 21, 2019

இடைக்கால அரசின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்!

இடைக்கால அரசின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்.ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
 
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஸ, இன்று (21) பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் காரியாலயத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

1 comment: