Saturday, May 31, 2014

பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகராக அமெரிக்காவுக்கான இந்திய தூதரான சுப்பிரமணியம் ஜெய்சங்கர்!

Saturday, May 31, 2014
புதுடெல்லி:பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகராக அமெரிக்காவுக்கான இந்திய தூதரான சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இவர் இந்திரா காலத்தில் இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக இருந்த ஜி. பார்த்தசாரதியின் கீழ் பணிபுரிந்தவர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் இலங்கை விவகாரங்களுக்கு என்று தனியே பாரத்தசாரதி என்ற அதிகாரி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அதைப் போல பிரதமர் நரேந்திர மோடியும் தமது சிறப்பு பிரதிநிதி ஒருவரை இலங்கை விவகாரங்களுக்கு என நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் ஒட்டுமொத்த வெளியுறவு விவகாரங்களுக்கு என தனியே ஒரு ஆலோசகரை நியமிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

தற்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருக்கும் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை மோடி தமது ஆலோசகராக நியமிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஓரிரு நாட்களில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகலாம் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுப்பிரமணியன் ஜெய்சங்கர் டெல்லியில் பிறந்தவர்.  மத்திய அரசு ஊழியரும் அரசியல் விமர்சகருமான கே.சுப்பிரமணியத்தின் மகனே ஜெய்சங்கர் . அவரது சகோதரர் சஞ்சய் சுப்பிரமணியன் வரலாற்று ஆய்வாளர்.

1977ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத் துறையில் இணைந்தார் சுப்பிரமணியன் ஜெய்சங்கர். 1979 ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை சோவியத் யூனியனுக்கான இந்திய தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் இந்திரா காலத்தில் இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக இருந்த ஜி. பார்த்தசாரதிக்கு சிறப்பு உதவியாளராக இருந்தார். அதைத் தொடர்ந்து 1989- 90ஆம் ஆண்டு இலங்கையில் நிலை கொண்ட இந்திய அமைதிப்படயின் அரசியல் ஆலோசகராக இருந்தார். அதன் பின்னர் ஜப்பான், சீனா நாடுகளுக்கான தூதராக இருந்த சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தற்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

'நாங்க இன்னும் யூத்..'சீனாவில் 70 வயது முதியவரை மணந்த 113 வயது பெண்!!

Saturday, May 31, 2014
பீஜிங்:சீனாவில் 113 வயதான பெண்மணி ஒருவர், வயதில் தன்னைவிட 43 வயது குறைவாக உள்ள 70 வயது முதியவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். தன்னைவிட வயது குறைவானவரை திருமணம் செய்து கொண்டதில் சங்கடம் எதுவும் இல்லை. இன்னும் நாங்கள் இளமையாகவே இருக்கிறோம் என்று அந்த மூதாட்டி கூறுகிறார்.
சீனாவின் மேற்கில் உள்ள ஜின்ஜியாங் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் 113 வயதான அசாத்திஹான் சாவூதியும் 70 வயதான அய்ம்தி அஹமதியும் சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். பின்னர், தங்களது திருமண புகைப்படங்களை சீன பத்திரிகைகளுக்கு வினியோகித்தனர். 'நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். என்னைவிட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக கவலைப்படவில்லை. சாப்பாட்டின்போது எனக்கு கறி சமைத்து போட்டு, என்னை அன்பாக கவனித்து கொள்கிறாள். ஒருவரை ஒருவர் கவனித்து கொள்வதில், இன்றும் நாங்கள் இளமையாக இருப்பதாக நினைக்கிறோம்' என்று அய்ம்தி அஹமதி பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

ஜின்ஜியாங் பிராந்தியத்தில் பாச்சு கவுன்டியில் இருக்கும் முதியோர் இல்லத்தில் அசாத்திஹானும்  அய்ம்தியும் கடந்த டிசம்பர் மாதம் சந்தித்து கொண்டனர். பின்னர் இருவரும் 6 மாதமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ ஆரம்பித்தனர். இப்போது முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். 'வயதான காலத்தில் திருமணம் செய்து கொள்வது அவமானமாக இருக்கும் என்று அசாத்திஹான் முதலில் மறுத்தார். நான்தான் அவரை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள வைத்தேன்' என்று அய்மதி புன்சிரிப்புடன் கூறியுள்ளார்.

கோலாலம்பூரில் புலி உறுப்பினரின் கடவுச்சீட்டைப் புதுப்பித்துக் கொடுத்த இலங்கைத் தூதரக அதிகாரிகள்!!

Saturday, May 31, 2014
இலங்கை::கோலாலம்பூரில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் தமது கடவுச்சீட்டை புதுப்பித்துக் கொடுத்ததாக, மலேசியாவில் பிடிபட்டு நாடுகடத்தப்பட்ட  புலிச் சந்தேக நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை தூதரக அதிகாரிகள் தம்மை அடையாளம் காணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 15ம் திகதி மலேசிய காவல்துறையினர் மூன்று இலங்கையர்களை கைது செய்து, 25ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தியிருந்தனர்.
 
இவர்களில் ஒருவரே இவ்வாறு கடவுச்சீட்டை புதுப்பித்துக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இரணைமடு விமான ஓடு பாதைக்கு பொறுப்பாக கடமையாற்றியவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 

அவுஸ்ரேலிய புகலிடக்கோரிக்கை யாளர்களின் சட்ட திட்டங்களை மேலும் வலுப் படுத்தியுள்ளது!

Saturday, May 31, 2014
அவுஸ்ரேலியாவில் புகலிடக்கோரிக்கை யாளர்களின் நல் நடத்தையினை யு ம் இவர்களுடைய அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் 1 புகலிடக்கோரிக்கை யாளருக்கு 1சேவை வழங்குனர் ஒருவரை நியமித் திருந்தது .
 
ஆனால் அவர்களின் சேவையை தற்ப்போது மாற்றி அமைத்துள்ளது. முன்னைய காலங்களில் 1 நபருக்கு 1 சேவை வழங்குனர் இவருடைய பிரச்சனைகளை தேவை ஏற்ப்படும் போது அவரை சந்திது தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் .
 
வருகின்ற3ம் திகதி முதல் வாரத்தில் 2 நட்டகல் காலை 9.00 மணி முதல் 3.00 மணிவரைக்கும் இந்த சேவை மட்டுப்படுத்தப் பட்டுள்ளது இந்த நேரங்களில் தேவைகள் இருப்பின் தனிப்பட்ட சேவை வழங்குனர் நியமிக்கப்பட மாட்டாது அலுவலகத்தில் இருக்கும் எதோ ஒரு அலுவலகர் ஊடாக புகலிடக்கோரிக்கை யாளர்கள் அவர்களுடைய தேவையை நிவர்த்தி செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
 
 

கல்முனையில் நவீன நீதிமன்ற கட்டிடத்தொகுதி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்!

Saturday, May 31, 2014
இலங்கை::கல்முனை நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடங்களின் வசதிகள் பற்றாக்குறை தொடர்பான கலந்துரையாடல் நேற்று நீதிமன்றக் கட்டிடத்தில் நடைபெற்றது . 
 
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரது தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை மேல் நீதிமன்ற, நீதிவான் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற ய உட்பட மட்டக்களப்பு மாவட்ட நீதிபதிகளும், சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர். 
 
கல்முனையில் சகல வசதிகளையும் கொண்ட நவீன நீதிமன்ற கட்டிடத்தொகுதி ஒன்றை அமைப்பது தொடர்பான விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் மட்டக்களப்பு நீதிமன்றங்களின் குறைபாடுகளும் கண்டறியப்பட்டன . 
 
கல்முனைக்கு வருகை தந்த பிரதம நீதியரசரை கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றார். 

தமிழரசுக்கட்சியின் தலைமைக்கு எதிராக நீதிமன்றங்களை நாடிச் செல்ல முற்படும் உறுப்பினர்கள்!

Saturday, May 31, 2014
இலங்கை::தமிழரசுக்கட்சியின உறுப்பினர்களுககு இடையிலான முரண்பாட்டின் காரணமாக அதன் உறுப்பினர்கள் பலரும் தலைமைக்கு எதிராக நீதிமன்றினை நாடிச்செல்ல தொடங்கியுள்ளனர். அவ்வகையில் மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்; கே.கௌரிகாந்தனும் நீதிமன்ற படியேற தயாராகியுள்ளார். அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா தற்போது கடிதமொன்றை அனுப்பியுள்ளார். ஏற்கனவே அவர் வகித்து வந்த தமிழரசுக்கட்சியின் மானிப்பாய் கிளை தலைவர் பதவியிலிருந்து நீக்கபட்டிருந்த நிலையினில் தற்போது அவர் முற்றாக கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு எதிராகச் செயற்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டே இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்டம் இரண்டு முறை தோற்கடிப்பதற்கு காரணமாக இருந்தமை, பிரதேச சபைத் தவிசாளர் பதவி விலகக் காரணமாக இருந்தமை உள்ளிட்ட விடயங்களைக் காரணம் காட்டி இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதுடன், பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவது தொடர்பாக தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒழுக்காற்று நடவடிக்கைகளிற்கு பொறுப்பான சீ.வி.கே.சிவஞானம்  தெரிவித்துள்ளார். ஏற்கனவே கட்சியின் வலி.கிழக்கு பிரதேசசபை தலைவர் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் ஆகியோர் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது மாநாட்டை எதிர்வரும் ஓகஸ்ட் 22, 23, 24 ஆம் திகதிகளில் வவுனியாவில் நடத்துவதற்கு கட்சி தீர்மானித்திருக்கின்றது. கட்சியின் வவுனியா மாவட்ட கிளையின் கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா முன்னிலையில் நேற்று நடைபெற்றபோது இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

வடமாகாணத்தில் 2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 264 பில். ரூபா செல விலான அபிவிருத்தி மற்றும் நலன்புரித் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது!

Saturday, May 31, 2014
இலங்கை::வடமாகாணத்தில் 2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 264 பில். ரூபா செல விலான அபிவிருத்தி மற்றும் நலன்புரித் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
2013ஆம் ஆண்டில் மாத்திரம் வடமாகாணத்தில் 49.4 பில்லியன் ரூபா செலவிலான உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
 
வடமாகாணத்தில் இடம்பெயர்ந்தவர்களின் நலன்புரித் திட்டங்களுக்காக அரசாங்கம் 23,933 மில்லியன் ரூபாவைச் செலவிட்டிருப்பதுடன், உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளுக்காக 221,444 மில்லியன் ரூபாவையும், சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்காக 20,410 மில்லியன் ரூபாவையும், கல்வித்துறை வளர்ச்சிக்காக 19,561 மில்லியன் ரூபாவையும் அரசாங்கம் செலவிட்டிருப்பதாக நிதியமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
 
வடமாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 25.9 வீதமாக அதிகரித்துள்ளது. 2011ஆம் ஆண்டில் 16.2 வீதமாகக் காணப்பட்ட வளர்ச்சிவீதம் 2013ஆம் ஆண்டு 25.9 வீதமாக அதிகரித்துள்ளது. வடமாகாணமானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் 4 வீத பங்களிப்பைச் செலுத்தியிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்தது.
 
அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் பல்வேறு வேலைத்திட்டங்கள் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் வேலையின்மை வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. வடமாகாணத்தில் 6.1 வீதமாகக் காணப்பட்ட வேலையற்றோர் வீதம் 5.2 வீதமாகவும், கிழக்கு மாகாணத்தில் இந்த எண்ணிக்கை 15.5 வீதத்திலிருந்து 4.3 வீதமாகவும் குறைவடைந்திருப்பதாக நிதியமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

99 காவல்துறை வீரர்களுக்கு பரிசு: முதல்வர் வழங்கினார்!

Saturday, May 31, 2014
சென்னை;;அகில இந்திய காவல்துறையினருக்கான பணித் திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற  99 காவல்துறை வீரர்களுக்கு  2 கோடியே 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகையினை முதல்வர் ஜெயலலிதா  வழங்கினார்.
காவல்துறையினரை ஊக்கப்படுத்தும் வகையில் தேசிய அளவில் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுப் போட்டிகள், துப்பாக்கிச்சுடுதல், அதிரடி படைத்திறன் மற்றும் குற்றப்புலனாய்வு, வெடிபொருள் கண்டுபிடித்தல், கணினி இயக்கம் முதலிய பணித் திறன் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
2004_ம் ஆண்டு முதல் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசாக முறையே 50 ஆயிரம் ரூபாய், 30 ஆயிரம் ரூபாய் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. 
தமிழக முதல்வர் ஜெயலலிதா இப்பரிசுத் தொகையினை 2013_ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பத்து மடங்காக உயர்த்தி முறையே, 5 லட்சம் ரூபாய், 3 லட்சம் ரூபாய் மற்றும் 2 லட்சம் ரூபாய் என்ற அளவில் வழங்க ஆணையிட்டார்.  மேலும், குழுப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களுக்கான கோப்பைகளை வெல்லும் அணியிலுள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் முறையே  50 ஆயிரம் ரூபாய், 30 ஆயிரம் ரூபாய் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையினையும் வழங்கிட ஆணையிட்டார்.
அகில இந்திய காவல்துறையினருக்கான பணித்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழ்நாடு காவல்துறையினருக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவல்துறை பல்வேறு போட்டிகளில் வென்றுள்ள கோப்பைகளை முதல்வர் ஜெயலலிதா பார்வையிட்டார். அப்போது, காவல்துறை தலைமை இயக்குநர் ராமானுஜம் தமிழ்நாடு காவல்துறை வென்றுள்ள கோப்பைகள் குறித்தும், அந்த கோப்பைகள் எந்தெந்த விளையாட்டுப் போட்டிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும்  எடுத்துரைத்தார். அகில இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பைகளை வென்ற தமிழ்நாடு காவல்துறையினருக்கு முதல்வர் ஜெயலலிதா தனது பாராட்டுதல்களைத்  தெரிவித்துக் கொண்டார்.
11_வது அகில இந்திய அளவிலான நீச்சல் போட்டி உத்தரகாண்ட் மாநிலம், ரூர்க்கியில் 1.3.2012 முதல் 5.3.2012 வரை நடைபெற்றது. இந்த நீச்சல் போட்டியில் தமிழ்நாடு காவல்துறை நீச்சல் குழுவைச் சேர்ந்த 4 காவல்துறை வீரர்கள் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.  அதற்கான பரிசுத்  தொகையாக தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 80 ஆயிரம் ரூபாய்;
ஒடிசா மாநிலம், ஜாஜ்பூரில் 3.10.2012 முதல் 7.10.2012 வரை நடைபெற்ற 13வது அகில இந்திய காவல்துறையினர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தமிழ்நாடு காவல் துப்பாக்கி சுடும் குழு, மாநிலங்களுக்கிடையேயான சிறந்த அணிக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையை வென்றது.  அந்த அணியில் இடம்பெற்ற 15 காவல்துறையினருக்கு பரிசுத் தொகையாக  மொத்தம் 8 லட்சம் ரூபாய்;
புதுடில்லி, மத்திய ரிசர்வ் காவல் படை வளாகத்தில் 16.11.2012 முதல் 20.11.2012 வரை நடைபெற்ற 61வது அகில இந்திய அளவிலான மல்யுத்தம், ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல் மற்றும் குத்துச் சண்டைப் போட்டியில், பெண்களுக்கான குத்துச் சண்டைப் பிரிவில் 2 வெண்கலப் பதக்கங்களும், ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் 1 வெண்கலப் பதக்கமும் பெற்ற 3 காவல் துறையினருக்கு பரிசுத் தொகையாக தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 60 ஆயிரம் ரூபாய்;
அசாம் மாநிலம், கவுஹாத்தியில் 24.3.2013 முதல் 30.3.2013 வரை நடைபெற்ற 61வது அகில இந்திய அளவிலான நீச்சல் போட்டியில் தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் 4 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். இவர்களுக்கு பரிசுத் தொகையாக மொத்தம் 24 லட்சம் ரூபாய்;
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் 10.10.2013 முதல் 14.10.2013 வரை நடைபெற்ற 62_வது அகில இந்திய அளவிலான நீச்சல் போட்டியில் தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.  இவர்களுக்கு பரிசுத் தொகையாக மொத்தம் 17 லட்சம் ரூபாய்;
உத்திர பிரதேச மாநிலம், லக்னோவில் 26.11.2013 முதல் 30.11.2013 வரை நடைபெற்ற 62வது அகில இந்திய அளவிலான தடகளப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற பெண் காவலருக்கு பரிசுத் தொகையாக 5 லட்சம் ரூபாய் மற்றும் கோலூன்றி உயரம் தாண்டுதல் (ஞடிடந ஏயரடவ) போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற காவலருக்கு பரிசுத் தொகையாக 3 லட்சம் ரூபாய், என 8 லட்சம் ரூபாய்;
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் 9.12.2013 முதல் 13.12.2013 வரை நடைபெற்ற 62வது அகில இந்திய அளவிலான மல்யுத்தம், ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல் மற்றும் குத்துச் சண்டைப் போட்டியில், ஜூடோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவருக்கும், குத்துச் சண்டைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவருக்கும்  தலா 2 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 4 லட்சம் ரூபாய்; 
கேரளா மாநிலம், திருச்சூரில் 20.1.2014 முதல் 24.1.2014 வரை நடைபெற்ற 62வது அகில இந்திய அளவிலான கைப்பந்து விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு காவல்துறை குழு மூன்றாம் இடத்தை வென்றது. அந்த அணியில் இடம்பெற்ற 14 காவல்துறை வீரர்களுக்கு பரிசுத் தொகையாக தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம், மெத்தம் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்;
சென்னையில் 22.1.2014 முதல் 27.1.2014 வரை நடைபெற்ற 4வது அகில இந்திய அளவிலான அதிரடிப்படை போட்டியில் தமிழ்நாடு காவல்துறை முதல் இடத்தைப் பிடித்து கோப்பையை வென்றது. மத்திய துணை இராணுவப் படைகள் மற்றும் பிற மாநில காவல் அணிகள் அளித்த கடுமையான போட்டிக்கிடையே, தமிழ்நாடு காவல்துறை இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாடு காவல் அணி, தடை ஓட்டப் போட்டிக்கான கோப்பையினையும்,  மாநிலங்களுக்கிடையே சிறந்த அணிக்கான கோப்பையினையும் வென்றுள்ளது. அந்த அணியில் இடம்பெற்ற 28 காவல்துறை வீரர்களுக்கு பரிசுத் தொகையாக தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 14 லட்சம் ரூபாய்;
அசாம் மாநிலம், திபுவில் 24.2.2014 முதல் 28.2.2014 வரை நடைபெற்ற 14வது அகில இந்திய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற காவலருக்கு 2 லட்சம் ரூபாய்;
ஹரியானா மாநிலம், மதுபானில் 7.3.2014 முதல் 14.3.2014 வரை நடைபெற்ற 57வது அகில இந்திய அளவிலான காவல் திறனாய்வு போட்டியில் தமிழ்நாடு காவல்துறை குழு 13 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளி பதக்கங்கள், 6 வெண்கலப் பதக்கங்கள், என மொத்தம் 28 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. இந்தச் சாதனை தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். மேலும், இந்தப் போட்டியில் ஒட்டுமொத்த கோப்பையையும்  தமிழ்நாடு காவல் அணி வென்றுள்ளது. அந்த அணியில் இடம்பெற்ற 26 காவல்துறை வீரர்களுக்கு பரிசுத் தொகையாக மொத்தம் 1 கோடியே 27 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்;
என மொத்தம் 99 காவல்துறை வீரர்களுக்கு 2 கோடியே 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகையினை முதல்வர்  ஜெயலலிதா  நேற்று வழங்கி வாழ்த்தினார்.
மேலும், தமிழ்நாடு காவல்துறையின் மோப்ப நாய் பிரிவை சேர்ந்த 5 மோப்ப நாய்கள்  போதைப் பொருட்கள் மற்றும் வெடிமருந்துப் பொருட்களை கண்டு பிடிக்கும் போட்டிகளில்  2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களோடு ஒரு கோப்பையையும் வென்றது. தமிழ்நாடு மோப்ப நாய் பிரிவைச் சேர்ந்த நாய்களின் திறமையை முதல்வர்   ஜெயலலிதா தனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்டார்.
முதலமைச்சரிடமிருந்து பரிசுத்தொகையினைப் பெற்றுக் கொண்ட காவல்துறை வீரர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டு, முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 
அப்போது, முதல்வர்  ஜெயலலிதா "அகில இந்திய அளவில் தமிழக காவல்துறைக்கும் தமிழ்நாடு அரசிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மென்மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு, பல சாதனைகளைப் படைத்து, அகில இந்திய அளவில் பல பரிசுகளை வென்று தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாடு காவல்துறைக்கும்  பெருமை  சேர்க்க வேண்டும்  என்று வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் கே. ராமானுஜம், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் எஸ். ஜார்ஜ், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (ஆயுதக் காவல் படை) ந. தமிழ்செல்வன், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (குற்றப் புலனாய்வுத் துறை _ குற்றப்பிரிவு) திரகரன் சின்கா, காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (செயலாக்கம்) சஞ்ஜய் அரோரா, மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Friday, May 30, 2014

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் ஜூன் 3-ம் தேதி நேரில் சந்திப்பு!

Friday, May 30, 2014
சென்னை::பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் ஜூன் 3-ம் தேதி நேரில் சந்திக்கிறார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜூன் 3-ம் தேதி புது டெல்லி பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசுவார்.
 
பிரதமர் அலுவலகத்தில் நடக்கும் இந்தச் சந்திப்பின்போது, தமிழக அரசின் சார்பில் மனு ஒன்றை பிரதமரிடம் அவர் அளிப்பார். அதில், மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தமிழகத்தின் மிக முக்கிய விவகாரங்கள் அடங்கியிருக்கும்.
 
தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையை துரிதமாக்குவதற்கு வித்திடக் கூடியதும், மாநில நலனைக் காக்கக் கூடியதுமான மத்திய அரசு அதிவேகமாக கவனம் செலுத்தக்கூடிய விவகாரங்கள் முன்வைக்கப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தச் சந்திப்பின்போது, நதிநீர்ப் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமருடன் முதல்வர் ஜெயலலிதா பேசுவார் எனத் தெரிகிறது.

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த தமிழக வீரர் முகுந்த் வரதராஜனுக்கு ஆளுநர் ரோசய்யா கவுரவ விருது வழங்கினார்!

Friday, May 30, 2014
சென்னை::காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த தமிழக வீரர் முகுந்த் வரதராஜனுக்கு ஆளுநர் ரோசய்யா கவுரவ விருது வழங்கினார். விருதை முகுந்த் வரதராஜனின் மனைவி பெற்றுக்கொண்டார்.
 
காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 44-வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் படைப் பிரிவில் பணியாற்றிய சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் (31) வீரமரணம் அடைந்தார். அவருக்கு கவுரவம் அளிக்கும் வகையில் விருது வழங்குவதற்கான விழா சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையின் தர்பார் ஹாலில் வியாழக்கிழமை நடந்தது. கவுரவ விருதை மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரபேக்கா வர்கீஸிடம் ஆளுநர் கே.ரோசய்யா வழங்கினார்.
 
விழாவில் ஆளுநர் ரோசய்யா பேசியதாவது:
 
இந்திய ராணுவம் உலகின் 2-வது பெரிய ராணுவம். நமது ராணுவ வீரர்கள் தமது இன்னுயிரைப் பணயம் வைத்து எல்லையைப் பாதுகாக்கும் பணியைச் செய்கின்றனர். அவர்களது தைரியமும் தியாகமும் உலகப்புகழ் பெற்றுள்ளது. மெட்ராஸ் ரெஜிமென்ட் 1950-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அமைக்கப்பட்டது. நமது ராணுவத்திலேயே அதுதான் பழமையானது. தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்ப்பதற்கான அனைத்தும் இந்திய ராணுவத்திடம் இருக்கிறது.
 
வீரர்களைப் போற்றுவோம்’
 
முகுந்த் வரதராஜனுக்கு மொத்த நாடும் மரியாதை செய்கிறது. காஷ்மீரில் அந்தப் பகுதி மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விட்டு தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட அவர் சென்றார். நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக அவர் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றோர், உயிர்த் தியாகம் செய்தோருக்கு நாம் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்.
 
இவ்வாறு ரோசய்யா கூறினார்.
 
தென் பிராந்திய ராணுவ ஜெனைரல் ஜக்பீர் சிங் பேசுகையில், ‘‘முகுந்த் வரதராஜனின் குழந்தை அர்ஷியாவின் கல்விக்கும் அவரது மனைவி மற்றும் குடும்பத்துக்கும் ராணுவம் என்றென்றும் துணை நிற்கும்’’ என்றார். இந்த விழாவை ரோட்டரி கிளப் ஆப் ஈஸ்ட் அமைப்பு ஏற்பாடு செய்து இருந்தது. அதன் தலைவர் சுதாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டமை தொடர்பில் இருவர் கைது: மீன்களும் பறிமுதல்!

Friday, May 30, 2014
இலங்கை::யாழ். சாவற்கட்டு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் டைனமைற் வைத்து மீன்பிடியில் ஈடுபட்டமை தொடர்பில் மீன்களை குளிர்பதனிட்டுக் கொண்டிருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து வாகனம் மற்றும் பெருமளவு மீன் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
குடாநாட்டில் அதிகரித்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்த்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில் மேற்படி கைது சம்பவம் இம்பெற்றுள்ளது.
 
மேற்படி சட்டவிரோத மீன்பிடியில் பிடிக்கப்பட்ட 1300 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவை சுமார் 4 லட்சம் ரூபா பெறுமதியானவை என யாழ்.கடற்றொழில் பரிசோதகர் தெரிவித்திருக்கின்றார்.
 
மேலும் கைதுசெய்யப்பட்ட இருவரையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவிற்கமை ய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
இதேவேளை இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நாவாந்துறை, கொட்டடி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகள் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் மீட்டுள்ளது.
 
நாவாந்துறை பகுதியில் 3 தொகுதி வலைகளும், கொட்டடி பகுதியில் ஒரு தொகுதி வலையும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட வலைகள் இதுவரையில் உரிமை கோரப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
 
கைப்பற்றப்பட்ட வலைகள் நிதீமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளது. நீதிமன்றின் உத்தரவிற்கமைய அடுத்தகட்ட நவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு வெல்லாவெளி மாணவர்களுக்கான வீதி ஒழுங்கு கருத்தரங்கு!

Friday, May 30, 2014
இலங்கை::வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய மாணவர்களுக்கு வீதிப்போக்குவரத்து தொடர்பான கருத்தரங்கு வெல்லாவெளி வீதிப்போக்குவரத்து பொலிஷாரினால் நடாத்தப்பட்டது.
அண்மைக்காலங்களாக இடம்பெற்றுவரும் அதிக வீதி விபத்துக்களில் இருந்து மாணவர்கள் மறறும் பொதுமக்களை பாதுகாப்பது பற்றிய ஆலோசனை வழங்கும் கருத்தரங்காகவே அமைந்திருந்தது.

மோட்டார் போக்ககுவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஜ.விக்கிரமசிங்க தலைமையில் இக்கருத்தரங்கினை பி.ஜ.செனாரெத்தின பி.சி.ஜெயரெத்தின தயாபரன் ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்களால் நடத்த்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து விதிமுறைகளை எப்படி கடைப்பிடிப்பது பற்றிய இக்கருத்தரங்கானது கலைமகள் வித்தியாலயத்தில் முதல் முறையாக நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

1350 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள மட்டக்களப்பு விமான நிலைய புனரமைப்பு!



Friday, May 30, 2014இலங்கை::உள்ளுர் விமான சேவைகளை விருத்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு விமான நிலைய ஓடு பாதை, பிரயாணிகளுக்கான வசதி மண்டபம் உள்ளிட்ட அபிவிருத்தி வேலைகளை சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிரியங்க ஜயரட்ன இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டார்.
1350 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வரும் விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகள் நிறைவில், 4800 அடி நீலமும், 45 மீற்றர் அகலமும் உடையதாக மட்டக்களப்பு விமான நிலையத்தின் ஓடு பாதை அமையும்.

புனரமைப்பு வேலைகளை பார்வையிட்ட அமைச்சர் பிரியங்க ஜயரட்ன அதிகாரிகளுடன் இந்த விமான நிலையத்தின் புனரமைப்பு வேலைகள் பற்றியும் அதன் முன்னேற்றம் பற்றியும் கலந்துரையாடினார்.

இதன்போது, சிவில் விமானசேவைகள் அதிகார சபையின் தலைவர் ஜெனரல் ரொஹான்தலுவத்த, சிவில் விமானசேவைகள் பிரதம பணிப்பாளர் எச்.எம்.சி.நிமால் சிறி, கட்டுநாயக்காக விமானநலைய பிரதித்தலைவர் கமல் ரத்வத்த, கிழக்கு மாகாண பணிப்பாளர் பொறியியலாளர் தர்மரெட்ணம், உட்பட அதன் அதிகாரிகள் மற்றும் விமானப்படை அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.

மட்டக்களப்பு உள்ளூர் விமான நிலையத்தின் ஓடு பாதை விஸ்த்தரிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டு வருவதுடன் பிரயாணிகளுக்கு வசதியான மண்டபமும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவ்வேலைகள் 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப் பிரயாணிகளின் வருகையினை அதிகரிக்கும் நோக்கில் இந்த அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

நகர அபிவிருத்தி அதிகா ரசபையுடன் இணைந்து விமான சேவைகள் பொறியியல்துறை இந்த விமான நிலைய புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்படுகிறது.

மட்டக்களப்பு விமான நிலைய புனரமைப்புக்கென 1350 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதுடன்  புனரமைப்பு பணிகளை அதி மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கடந்த 2013 செப்ரம்பரில் ஆரம்பித்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவச் சிப்பாயின் கையைக் கடித்த யாழ்வாசி கைது!

Friday, May 30, 2014
இலங்கை::இராணுவச் சிப்பாய் ஒருவரின் கையினைக் கடித்த, யாழ்.நவக்கிரி நிலாவரை யடியினைச் சேர்ந்த நபர் ஒருவர் வியாழக்கிழமை (29) இரவு கைது செய்யப் பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
அதேயிடத்தினைச் சேர்ந்த கணேஸ் ஸ்ரீஸ்கந்த ராசா (32) என்பவரே இவ்வாறு கைது செய்யப் பட்டார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
 
குறித்த நபர் மது அருந்திய நிலையில் வியாழக்கிழமை(29) தனது மனைவியுடன் சண்டையிட்டதுடன்   தற்கொலை செய்யப் போவதாகக்கூறி தனது கழுத்தில் கத்தியினை வைத்து குடும்பத்தினரை மிரட்டிக் கொண்டி ருந்துள்ளார்.
 
இதனால் மனைவி கூக்குரலிடவே, அவ்வீதி வழியாக துவிச்சக்கர வண்டிகளில் ரோந்து சென்றுகொண்டிருந்த இராணுவத்தினர், வீட்டிற்குள் வந்து குறித்த நபரின் கையிலிருந்து கத்தியினைப் பறித்தனர்.
 
இதன்போது, குறித்தநபர் இராணுவ சிப்பாய் ஒருவரின் கையினைப் பலமாகக் கடித்துள்ளார். இதனால் காயமடைந்த இராணுவ சிப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.
 
இந்நிலையில் மேற்படி நபரின் குடும்பத்தினரால் அச்சுவேலிப் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபரைக் கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தால் வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி!

Friday, May 30, 2014
இலங்கை::வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் பதிவை விழிப்பூட்டும் வகையில் யாழ். மாவட்ட தேர்தல்கள்  திணைக்களத்தால் இன்று காலை விழிப் புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது.  
 
இன்று காலை 9.30 மணியளவில் தபால் நிலையச் சந்தியிலிருந்து ஊர்வல மாகப் புறப்பட்ட ஊழியர்கள்,சத்திர சந்தியூடாக யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர்.   மேலும் பேருந்து நிலையத்தில் வைத்து வாக்காளர் பதிவை தூண்டும் வகையிலான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக் கப்பட்டன.
 
பேரணியின் போது வாக்காளர்களாக  பதிவு செய்ய வேண்டியதன் அவசிய த்தை உள்ளடக்கிய வாசகங்கள் காட்சிப் படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Friday, May 30, 2014
இலங்கை::நீண்ட காலமாக பதில் தொழி லாளிகளார்களாக பணியாற்றி வரும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப் படவில்லை எனத் தெரிவித்து யாழ். மாநகர சபை தற்காலிக பதில் தொழிலாளர்கள் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட காலமாக பதில் தொழிலா ளர்களாக பணி செய்த 37 பேருக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
 
குறித்த நியமனப் பட்டியலில் தமது பெயர் இடம் பெறவில்லை என்றும் தாம் எட்டுத் தொடக்கம் பத்து ஆண்டுகள் தொடர்ந்து பணி செய்த போதிலும் தாம் புறக்கணிக்கப் பட்டிருக்கின்றனர் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பதால் தமது குடும்பமும் தாமும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளவேண்டிய சூழல் இருப்பதாகத் தெரிவித்து அவர்கள் யாழ்.மாநகர சபை முன்றிலில் பதாதைகளை ஏந்திய வாறு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இலங்கையில் 2016ம் ஆண்டு முதல் இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும்: ஜீ.ஏ.ஆர்.தேசப்பிரிய!

Friday, May 30, 2014
இலங்கை::இலங்கையில் 2016ம் ஆண்டு முதல் இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஜீ.ஏ.ஆர்.தேசப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மாணவ மாணவிகள் அடையாள அட்டைகளை கோரி விண்ணப்பித்துள்ளனர்.விண்ணப்பிப்பதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட காலம் இந்த மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. மாணவர்களிடம் இருந்து மேலும் 4 லட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்படுகிறது.
ஒக்டோபர் 31 ஆம் திகதி பிறந்த 16 வயது பூர்த்தியாகும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 16 வயதுக்கும் குறைந்த வயதுடைய மாணவர்கள் அஞ்சல் அடையாள அட்டைகளை பயன்படுத்த முடியும் என்றார்.
மேலும், 2016 ஆண்டு முதல் இலத்திரணியல் அடையாள அட்டை பாவனைக்கு வருவதுடன் தற்போது பயன்பாட்டில் இருக்கும் அடையாள அட்டை இரத்துச் செய்யப்படுவதுடன் 15வயது பூர்த்தியானவர்கள் முதல் அனைவருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான இரு நாட்டு உறவுகளிலும் புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது: நிமல் சிறிபால டி சில்வா!

Friday, May 30, 2014
இலங்கை::இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவுகள் மிகவும் வலுவடைந்துடன், இரு நாட்டு உறவுகளிலும் புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இந்தியப் பிரதமருடனான சந்திப்பின் போது அரசியல், கலை, கலாசார, வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான தெளிவான நிலைப்பாட்டை ஜனாதிபதி அவர்கள் இந்தியப் பிரதமருக்கு எடுத்துரைத்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு, 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தல் போன்ற சகல விடயங்களும் சகல கட்சிகளையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு மூலமே தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெளிவாக இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன் எவரது அழுத்தங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் இதனை செய்துவிடமுடியாது. எவரும் எமக்கு உத்தரவிட முடியாது என்றும் அமைச்சர் நிமல் தெரிவித்தார்.இந்தியா எமக்கு கூறுவதற்கு செவிமடுக்க முடியும். ஆனால் அவர்கள் கூறுவது போல எம்மால் செய்ய முடியாது. எனினும் இந்தியப் பிரதமர் மற்றும் எமது ஜனாதிபதிக்கும் இடையேயான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக ஆரோக்கியமானதாகவே அமைந்திருந்தது.

இரு நாடுகளிலும் பலம் வாய்ந்த அரசுகள் உள்ளன. சர்வதேசத்துக்கு முன்னால் சார்க் வலய நாடுகள் ஒரே எண்ணத்திலான நிலைப்பாட்டை காண்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இந்தியப் பிரதமர் உள்ளார் என்றும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சஜின்வாஸ் குணவர்த்தன தெரிவித்தார். 13வது திருத்தச்சட்டம் என்பது எம்மீது பலாத் காரமாக திணிக்கப்பட்ட தொன்று என்பதை அனைவரும் அறிவார்கள். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஜே.ஆர்.ஜயவர்த்த னவால் இது கொண்டுவரப்பட்டது. இதனை நாம் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகிறோம்.

ஒரு கட்டத்தில் நாம் வட மாகாண சபையை உருவாக்க மாட்டோம் என்ற பிரசாரத்தை கொண்டு சென்றார்கள். இன்று வடமாகாண சபையும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார்கள். முதலில் முழுமையாக என்றால் என்ன? 13வது திருத்தச் சட்டத்தில் எதனை நடை முறைப்படுத்துவது எதனை நீக்குவது என்பது தொடர்பான முடிவை பாராளுமன்றமே எடுக்கும். அதற்காகவே அனைத்துக் கட்சிகளும் உள்ளடக்கியதாக பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப் பட்டுள்ளது.

பாராளுமன்றத்துக்கு வெளியே எங்கெங்காவது சென்று கூறித்திரிவதை விடுத்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்குள் வர வேண்டும். அதற்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் இன்னமும் காலியாகவே காத்திருக்கின்றன என்றும் அமைச்சர் நிமல் தெரிவித்தார். இவர்களுடன் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

படைவீரர் மாதத்தை முன்னிட்டு இராணுவ வீரர்களின் பிள்ளைகளின் கல்விக்காக புலமைப்பரிசில்!

01 02 03

05 06 07

09 10 11

13 14 15

17 18 19
Friday, May 30, 2014
இலங்கை::படைவீரர் மாதத்தை முன்னிட்டு 2015 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் முப்படை மற்றும் பொலிஸாரின் 50 பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் தொகை வழங்கும் நிகழ்வொன்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சில்  (மே 29) காலை இடம்பெற்றது.
 
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்கள் கலந்து கொண்டதுடன் முப்படைகளின் தளபதிகளும் இணைந்து இந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் தொகையை வழங்கி வைத்தனர்.
 
படைவீரர்களின் குடும்ப நல வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நாட்டின் எதிர் காலத்தை பொறுப்பேற்கவுள்ள முப்படை மற்றும் பொலிஸாரின் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
தேசிய சேமிப்பு வங்கியின் பிரதான அனுசரணையூடனும் அலவ்வ இலங்கை வங்கி, சேமகே சமூக வியாபாரம் மற்றும் டிமோ நிறுவனங்களின் இணை அனுசரணைகளுடன் மாணவ, மாணவி ஒருவருக்கு தலா 24 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் ரூபா பன்னிரெண்டு இலட்சம் பெறுமதியான புலமைப்பரிசில் தொகை 50 பேருக்கு வழங்கிவைக்கப்பட்டது.
 
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்கஇ விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக்க ஆகியோர் உயர் தரத்தில் கல்வி கற்கும் படைவீரர்களின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டை கருத்திற் கொண்டு புலமைப்பரிசில் தொகை வழங்கியது.
 
இந்த நிகழ்வில் முப்படை மற்றும் பொலிஸ் நலன்புரி சங்கத்தின் பணிப்பாளர் மல்காந்தி ஜயவர்தன, அதன் திட்டப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் வசந்த குமார, தேசிய சேமிப் வங்கியின் பிரதி பொது முகாமையாளர் ஜகத் கமநாயக்க, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சேவா வனிதா பிரிவின் உப தலைவரும் அமைச்சின் மேலதிக செயலாளருமான இந்து ரத்நாயக்க, பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கட்டளை தளபதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர். டபிள்யூ. எம். சி. ரணவன உட்பட முப்படைகளின் நலன்புரி பிரிவுகளின் பணிப்பாளர் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்த கொண்டனர்.