Sunday, November 25, 2012

புலிகளின் மாவீரர் தினத்திற்கு வசூல் செய்யும் போட்டிக் குழுக்களால் உயிர்ப்பலி:புலம்பெயர் நாடுகளில் நிதி சேகரிப்போர் கடும் மோதலில்!

Sunday, November 25, 2012
இலங்கை::புலம்பெயர் நாடுகளில் போராட் டத்துக்கென நிதி சேகரித்து ருசிகண்ட வர்கள், அந்த வருமானத்துக்கும் வசதி களுக்காகவும் மட்டுமே இப்போது அங்கே அடிபிடியை நடத்திக் கொண் டிருக்கிறார்கள். இந்த மாதம் வரும் மாவீரர் நாளையொட்டி, யார் வசூலுக்கு உரித்துடையவர்கள் என்ற போட்டியில் உயிர்ப் பலியெடுப்புகளும் கூட அங்கு நடக்கின்றன.

புலிகளின் மாவீரர் நாளுக்கு உரிமை கோரும் குழுச்சண்டையைப் பட்டவர்த்தனமாகக் காட்டி, அந்த இறந்துபோன வீரர்களை இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு மாவீரர் நாள் வசூலுக்காக அடிபடுகிறவர்கள் ஒருபுறமிருக்க, அந்த இழப்புகளை உணர்ச்சிகர ஆவேச வசனங்களாக்கி ஊடக வியாபாரம் மற்றும் கதிரை லாபங்களுக்குப் பயன்படுத்தித்கொள்ளும் முனைப்பில் உலகத் தமிழர்களை உணர்ச்சிப் பாயில் சுருட்டி எடுப்பவர்களும் மறுபுறும் அதே பழைய பாணியில் பழிவாங்கும் உண ர்ச்சிகளையும், பகைவெறுப்பு ஆவேசத்தையும் மீண்டும் தூண்டிவிடும் விதமாக ஒரு சில இணையத்தளங்கள் எழுதுகின்றன. மனிதப் பேரவலம் நிகழ்ந்து மூன்றரை வருடங்கள்தான் ஆகியிருக்கின்றன.

அதற்குள் மீண்டும், எப்படி கொஞ்சங்கூட பொறுப்பற்று மக்களை அழிவுக்குத் தூண்டும் வார்த்தைகளைப் பேசமுடிகிறது இவர்களால் என்று திகைப்பாக இருக்கிறது. வன்முறையின் தோல்வியை இவ்வளவு குரூரமாக அனுபவித்த பிறகும், அதைவிட்டு வேறு வழிமுறை களை யோசிக்க மாட்டாதவர்களாக அல்லது யோசிக்க விடாதவர்களாக இன்றும் பலர் இருப்பது ஒருவகையில் நம் சமூகத்தின் சாபக்கேடுதான். எமது அறியாமையிலும், ஆணவத்திலும், ஆத்தி ரத்திலும், அடையாளங்களை முன்னிறுத்தி ரோசப்படுவதிலும், பழிக்குப் பழி வாங்குவதிலும், பகை வளர்த்து அழிவ திலும் இந்த சாபக்கேட்டை வெளிப் படுத்தி வருகிறோம். காந்தி சொன்னது போல, திருப்பித் தாக்குவதுதான் உயிர் வாழ்வதற்கான நியதி என்று நம்புவது பேல நடிக்கின்றோம்.

எங்களுக்குப் பிரச்சினைகள் உண்டு. அந்த நெருக்குதல்களிலிருந்து மீள வேண்டிய தேவை உண்டு. இதையெல்லாம் யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் நமது தீர்வுக்காக நாம் வன்முறை வழியை நாடி அதில் மிகப் பலமும் அடைந்து வருகிறோம் என்று நம்பியது எவ்வளவு பெரிய மாயையாகப் போயிற்று? மீண்டும் அந்த மிரட்டல் வழியையே கிட்டவோ தூரவோ இலக்காகக் காட்டி அரசியல் செய்துகொண்டிருப்பவர்கள் மக்களை முழு முட்டாள்களாயடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தவிர வேறொன்றுமில்லை.

No comments:

Post a Comment