Tuesday, February 21, 2012

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ராஜதந்திர வரப்பிரசாதங்களை வழங்கும் அதிகாரம் அமெரிக்க ஜனாதிபதிக்கு உண்டு!

Tuesday, February 21, 2012
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ராஜதந்திரவரப்பிரசாதங்களை வழங்கும் அதிகாரம் அமெரிக்க ஜனாதிபதிக்கு உண்டு என அந்நாட்டுராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக, மனோகரன் என்பவரினால் அமெரிக்காவின் கொலம்பிய மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில்,அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

அரசியல் அமைப்பின் பிரகாரம் குற்றச் செயல்களில் தண்டனை விதிக்காமல் இருப்பதற்கான ராஜதந்திர வரப்பிரசாதத்தை வழங்கும் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் துணை சட்ட மாஅதிபர் டோனி வெஸ்ட் மற்றும் அமெரிக்கநீதித் திணைக்களத்தின் துணை கிளைப் பணிப்பாளர் வின்சன்ட் எம் கிரேவி ஆகியோர்அரசாங்கத்தின் சார்பில் நீதிமன்றில் இந்த விளக்கத்தை அளித்துள்ளனர்.

டொக்டர் மனோகரனின் சார்பில் சட்டத் தரணி புருஸ் ஆஜரானார். அமெரிக்க ஜனாதிபதியின் வெளியுறவு விவகாரம் அரசியல் சாசனத்தில்உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தலையீடு செய்யும் திட்டம் கிடையாது என அமெரிக்ககாங்கிரஸ் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment