Thursday, January 12, 2012சென்னை::முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி நக்கீரன் வார இதழில் அவதூறு செய்தி வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். நக்கீரன் புத்தகம் தீவைத்து கொளுத்தப்பட்டது. கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் புகார்கள் செய்து வருகிறார்கள். நக்கீரன்கோபால் மீது இதுவரை 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. பிரமுகர் அன்பு மற்றும் வக்கீல்கள் ஜான்சி, வாசுதேவன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் நக்கீரன் கோபால் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதஉணர்வை தூண்டும் வகையில் செய்தி வெளியிட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கான சட்டப்பிரிவின் கீழும் கோபால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குமரி மாவட்டத்தில் நக்கீரன் கோபால் மீது 9 வழக்குகள் பதிவாகியுள்ளன. குமரி மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் கிருஷ்ணதாஸ் செய்த புகாரின் பேரில் கோட்டார் பேலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல அ.தி.மு.க. பிரமுகர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் மார்த்தாண்டம், திருவட்டார், மேல்புஷம், அடுமனை, ராஜாக்கமங்கலம், தக்கலை, இரணியல், கருங்கல், கொள்ளிக்கோடு போலீஸ் நிலையங்களிலும் தனித் தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோட்டில் 27 வழக்குகள் நக்கீரன் கோபால் மீது ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. நக்கீரன் கோபாலை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சுதா பரமசிவன், மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இதுவரை 5 போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. வக்கீல்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் திசையன்விளை போலீசார் நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவையில் நக்கீரன் கோபால் மீது 2 போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. எம்.பி. குமார் அளித்த புகாரின் பேரில் திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் பரஞ்சோதி, மனோகரன் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம், உறையூர் போலீஸ் நிலையங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தோகமலை, குளித்தலை, சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி, அறந்தாங்கி, பாபநாசம் போலீஸ் நிலையங்களிலும் கோபால் மீது தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் கொடுத்த புகாரின்பேரில் கோபால் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் ஒரு வழக்கும், சிவகங்கையில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டி, போடி உள்பட 5 போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment