Saturday, January 28, 2012

இலங்கை மீது பொய்க் குற்றம் சுமத்தும் அமெரிக்காவில் ஊடக சுதந்திரம் இல்லை:சர்வதேச ஊடக அமைப்பொன்று குற்றச்சாட்டு!

Saturday, January 28, 2012
இலங்கை::ஊடக சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் சீர்குலைத்து வருகிறதென்று சர்வதேச அரசியல் சக்திகளின் கைப்பொம்மைகளும் புலிகளின் டொலர்களுக்காக வாலை ஆட்டிக் கொண்டு, புலிகளின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக இலங்கையில் ஊடக சுதந்திரம் பறிக்கப்படுகிறதென்று அரசாங்கத்திற்கு எதிராக தற்போது ஆர்ப்பாட்டங்களை நடத்தி வரும் சுயநலவாத சக்திகள் அமெரிக்காவில் இடம்பெற்று வரும் ஊடக சுதந்திர மீறல்கள் குறித்து வாயடைத்து போயிருக்கின்றன.

எல்லைகளைக் கடந்த பத்திரிகையாளர் என்ற சர்வதேச அமைப்பு தனது வருடாந்த அறிக்கையில் ஊடக சுதந்திரத்தை மீறிய நாடுகளில் 27 ஆம் இடத்தில் இருந்து வந்த அமெரிக்கா தற்போது 47 வது இடத்திற்கு பின்னடைவை அடைந்துள்ளது என்று அறிவித்துள்ளது. அமெரிக்கா, கெமரோஸ் மற்றும் தாய்வானுக்கு பின்னால் மனித உரிமை மீறல் பட்டியலில் இருந்து வருகின்றது.

இதேவேளையில் பூரண ஊடக சுதந்திரத்தைக் கொண்டுள்ள நாடுகளில் பின்லாந்து, நோர்வே, இஸ்டோனியா, நெதர்லாந்து, ஒஸ்ரியா ஆகியவற்றுடன் வடகொரியாவும் இருக்கின்றது. பாகிஸ்தான் உலகில் ஊடகவியலாளர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய படுமோசமான நாடு எனவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரிட்ரியாவும் ஊடக சுதந்திரத்தை அபகரிக்கும் நாடுகளின் அணியில் இருக்கின்றது.

ஊடக சுதந்திரத்தை சீர்குலைக்கும் நாடுகளின் தரப்படுத்தலில் ஆப்கானிஸ்தான் 150 ஆவது ஸ்தானத்தையும் பாகிஸ்தான் 151 ஆம் ஸ்தானத்தையும் பெற்றுள்ளன. பாகிஸ்தானில் கடந்தாண்டு 10 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். லிபியா இந்த தரப்படுத்தலில் 154 ஆவது ஸ்தானத்தையும் யெமன் 171 ஆவது ஸ்தானத்தையும் வகித்து வருகின்றன.

எகிப்து முன்னர் 39 ஆவது ஸ்தானத்தில் இருந்து இப்போது 169 ஆவது ஸ்தானத்திற்கு பின்னடைவை அடைந்துள்ளது. ஊடக சுதந்திரத்தை பறிக்கும் நாடுகள் அணியில் சிரியா 176 வது ஸ்தானத்தை பெற்றுள்ளது.

ஆபிரிக்காவில் டிஜி புட்டி நாடு 49 ஆவது ஸ்தானத்திலிருந்த 159 ஆவது ஸ்தானத்திற்கும் மலாவி 146 ஆவது ஸ்தானத்திற்கும் உகண்டா 139 ஆவது ஸ்தானத்திற்கும் பின்னடைவை அடைந்துள்ளன. இவ்விதம் உலகில் ஜனநாயக நாடு என்று தன்னை பறைசாற்றிக் கொள்ளும் அமெரிக்கா போன்ற மேற்கத்தேய நாடுகளில் மனித உரிமை மீறல்கள் மட்டுமன்றி ஊடக சுதந்திரமும் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றச்சாட்டுகள் பற்றி பின்னணியில் இருந்து இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் எதிர்ப்பை கிளப்புவதற்கு பொம்மலாட்டங்களை வெற்றிகரமான முறையில் செயற்படுத்தி வரும் அமெரிக்கா போன்ற நாடுகள் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டிருப்பதற்கான ஆதாரங்கள் இப்போது வெளிப்பட்டுள்ளன.

ஈராக்கில் 24 பேரை படுகொலை செய்த அமெரிக்க இராணுவ உத்தியோகத்தர் ஒருவருக்கு அமெரிக்க அரசாங்கம் 3 மாத சிறைத்தண்டனையை மாத்திரம் விதித்தது. அவரது சம்பளத்தை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டுமென்று விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமெரிக்க அரசாங்கம் மறுப்பு தெரிவித்து, அவரது சம்பளம் தடுக்கப்பட்டால் அந்த உத்தியோகத்தரின் குடும்பத்தினர் கஷ்டப்படுவார்கள் என்ற காரணத்தைக் காட்டி அக்கோரிக்கையை நிராகரித்தது.

இவ்விதம் அமெரிக்கா மனித உரிமை மீறல்கள், ஊடக சுதந்திரம், யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒன்றுக்கொன்று மாறுபட்ட கொள்கைகளை கடைப்பிடித்து வருகின்றது.

தானும் தன்னை ஆதரிக்கும் நாடுகளும் மனித உரிமைகளை மீறினால் அது குற்றமல்ல என்ற போக்கில் இருந்துவரும் அமெரிக்காவும் அதனைச் சார்ந்த மேற்கத்தேய நாடுகளும் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக வெளிவரும் வதந்திகளையும், போலிக் குற்றச்சாட்டுகளை யும் நம்பி அந்நாடுகள் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தி சர்வதேச ரீதியில் அந்நாடுகளுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தி வருகின்றன.

0 comments:

Post a Comment