Thursday, January 12, 2012

சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் 20-ந்தேதிக்கு தள்ளிவைப்பு!

Thursday, January 12, 2012
பெங்களூர்::சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் 20-ந்தேதிக்கு தள்ளிவைப்பு:-

சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கு ஆவணங்களை தமிழில் தருமாறு கேட்டு சசிகலா அக்கோர்ட்டில் மனு கொடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்க சிறப்பு கோர்ட்டு மறுத்து விட்டது.

இதை எதிர்த்து சசிகலா பெங்களூர் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். இவ்வழக்கில் இன்று சசிகலா வக்கீல் ஆஜராகாததால் நீதிபதி 20-ந்தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment