Friday, September 30, 2011

முன்னாள் புலிகளுக்கு புதிய வாழ்க்கையை தொடங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை!

Friday, September 30, 2011
முன்னாள் புலிகளுக்கு புதிய வாழ்க்கையை தொடங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை!

புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 1800 பேர் இன்று அவர்களது பெற்றோர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதற்கான விசேட நிகழ்வு அலரிமாளிகையில் இன்று இடம்பெற்றது.

புதிய வாழக்கையை தொடங்க முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளதென இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஜனாதிபதி முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

புலிகள் இயக்கத்தின் பிரதான சர்வதேச தளமாக நெதர்லாந்து-நெதர்லாந்து அரச தரப்பு தெரிவித்துள்ளது!

Friday, September 30, 2011
புலிகள் இயக்கத்தின் பலவந்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக நெதர்லாந்தில் உள்ள சுமார் ௯000. - 13000 வரையான தமிழ் மக்கள் புலிகளுடன் இணைந்து செயற்பட வேண்டிவந்ததாக நெதர்லாந்து அரச தரப்பு தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தில் புலி இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள ஐவர் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நெதர்லாந்து அரச தரப்பு சட்டத்தரணி இவ்வாறு கூறியுள்ளார்.

வழக்கு தொடரப்பட்டுள்ள 5 பேருள் 52 வயதுடைய ராமச்சந்திரன் என்பவர் புலிகளின் சர்வதேச கணக்காளர் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் நிதி சேகரித்து புலிகளுக்கு ஆயுதம் கொள்வனவு செய்து கொடுத்ததாக நெதர்லாந்து அரச வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவருக்கு 16 வருட சிறை தண்டனை விதிக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஏனைய நால்வரில் 40 வயதுடைய ஸ்ரீரங்கம் என்பவர் நெதர்லாந்து புலிகள் இயக்கத்தின் தலைவர் எனக் கூறியுள்ள வழக்கறிஞர்கள் அவர் உள்பட நால்வருக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்குமாறும் கோரியுள்ளனர்.

புலிகளின் சர்வதேச வலையமைப்பு இயங்கும் பிரதான நாடாக நெதர்லாந்து காணப்படுவதாக அரச சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

புலிகளுக்கு வால்பிடிக்கப் போய் இழந்தது போதாதா?:நாட்டுக்கு எதிரான கட்சிகளிடம் சோரம்போய்விட்டார் ரணில்-குணதாச அமரசேகர!

Friday, September 30, 2011
தருஸ்மன் அறிக்கையை சர்வதேசம் ஏற்றுவிட்டதாகக் கூறுவது அப்பட்டமான பொய். ரணிலின் கூற்றை நாம் அடியோடு நிராகரிக்கின்றோம். புலிகளுக்கு வால்பிடிக்கப் போய் இழந்தது போதாதா? இவ்வாறு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக விமர்சித்துள்ளார்.நாட்டுக்கு எதிரான கட்சிகளிடம் சோரம்போய்விட்டார் எதிர்க்கட்சித் தலைவர். இனி அவர் உள்ளதையும் இழக்கப் போகின்றார் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வதேசத்தினால் சுமத்தப்பட்டுள்ள யுத்தக்குற்றங்கள் அடங்கலான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை அரசு இந்த வருடத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் சர்வதேசத்தின் கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கவேண்டிய நிலை ஏற்படும்.

யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பான ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையை சர்வதேசம் ஏற்றுவிட்டது. நாடாளுமன்றத் தெரிவுக்குழு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு ஏற்றவகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி செயற்படும்.'' என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நேற்று முன்தினம் வழங்கிய விசேட பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கூற்று தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

தருஸ்மன் தலைமையிலான குழுவைத் தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அமைத்தார்.

அந்தக் குழுவின் அறிக்கை ஐ.நா. அறிக்கை அல்ல என்பதை நாம் ஆரம்பத்தில் இருந்தே தெளிவாகக் கூறி வருகின்றோம்.

அரசும் அந்த அறிக்கையை நிராகரித்துவிட்டது. ஏன்? அறிக்கைக்கு சொந்தக்காரரான பான் கீ மூனே அறிக்கையை சர்வதேசம் ஏற்றுவிட்டது எனக் கூறவில்லை.

இவ்வாறானதொரு நிலையில் ரணில் விக்கிரமசிங்க இந்த விவகாரத்தில் முண்டியடிப்பதன் நோக்கம் என்ன? அவர் யாரைத் திருப்திப்படுத்த முயற்சிக்கின்றார்?

நாட்டுக்கு எதிரான ஒரு கட்சியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அந்தக் கட்சியின் நிலைப்பாட்டைத் தாம் வரவேற்பதாக ரணில் கூறியுள்ளார்.

இதுவோர் அருமையான விடயம். மனப்பூர்வமாக நாம் வரவேற்கின்றோம்.

ஏனெனில், புலிகளுக்கு உதவப்போய் ரணில் விக்கிரமசிங்க இழந்தது ஏராளம். இப்பொழுது கூட்டமைப்புக்கு அதாவது, நாட்டுக்கு எதிரானவர்களுக்கு உதவப் போயுள்ளார்.

எனவே, உள்ளதையும் அவர் இழக்கப்போகின்றார் என்பது நிச்சயம். இதுவே எமக்கு வேண்டும். அதனால்தான், ரணிலின் கூற்றை வரவேற்பதாக நான் கூறினேன்.

எதிர்க்கட்சித் தலைவர், தருஸ்மன் அறிக்கையை சர்வதேசம் ஏற்றுவிட்டதாகக் கூறுவது அப்பட்டமான பொய். அவரின் கூற்றை நாம் அடியோடு நிராகரிக்கின்றோம் என்றார் அவர்.

தபால் அலுவலக பொறுப்பதிகாரி கொலை!

Friday, September 30, 2011
நாவலப்பிட்டி, கலபொட பிரதேசத்தின் உப தபால் அலுவலகத்தின் நிலையப் பொறுப்பதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை கிடைத்த தகவலுக்கு அமைய தபால் நிலையத்திலிருந்து சடலத்தை கண்டெடுத்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நாவலப்பிட்டி தெகித பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

2010ம் ஆண்டில் ஆயுதம் வாங்கியதில் இந்தியா முன்னிலை!

Friday, September 30, 2011
வாஷிங்டன் : கடந்த 2010ம் ஆண்டில் ஆயுதங்கள் வாங்கியதில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்தது. அந்த வகையில் பாதுகாப்பு மேம்பாட்டுக்காக ரூ.28,420 கோடி மதிப்பில் ஆயுதங்களை இந்தியா வாங்கியதாக அமெரிக்க காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 2010ல் ரஷ்யாவிடம் ரூ.7,350 கோடி மதிப்பிலான 29 எம்ஐஜி&29கே போர் விமானங்கள், இங்கிலாந்திடம் 57 ஹவாக் ஜெட்கள், இத்தாலியிடம் 12 ஏடபிள்யூ 100 ஹெலிகாப்டர்களையும் இந்தியா வாங்கியுள்ளது.

இதுபோன்று ஆயுதங்கள், கருவிகள் வாங்கியதில் இந்தியா முதலிடமும், தைவான், சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்கியதில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. மேலும் உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை இஸ்ரேல், பிரான்ஸ், அமெரிக்காவிடம் இருந்தும் இந்தியா பெற்றுள்ளது.

வளரும் நாடுகளுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தங்களிதி அமெரிக்கா, ரஷ்யா முதல் 2 இடங்களில் உள்ளன. உலக அளவில் 2010ம் ஆண்டில் ஆயுதங்கள் பரிமாற்ற ஒப்பந்தங்களின் மதிப்பு ஸி1.98 லட்சம் கோடி. 2009ல் இது ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்து. ரஷ்யா தெற்கு ஆசியாவுக்கு நவீன ஆயுதங்கள் வழங்குவது கவலையளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சிவில் பாதுகாப்பு குழுக்களின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை!

Friday, September 30, 2011
சிவில் பாதுகாப்பு குழுக்களின் செயற்பாடுகளை மீண்டும் சிறந்த முறையில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நேற்று(செப்-28) கொழுப்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழுக்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பாதுகாப்பு செயலாளர் திரு.கோடாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த யுத்தகாலங்களில் மிகச் சிறந்த முறையில் தமது கடமைகளை மேற்கொண்ட இக் குழுக்கள், யுத்தத்திற்கு பின்னர் சரியாக செயற்படாததன் காரணத்தால் கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் பதட்ட சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. கிரீஸ் மனிதன் போன்ற குழப்ப சூழ்நிலை ஏற்படாமல் அமைதியான, சமாதான சூழல் நாடெங்கிலும் நிலைத்திருக்கச் செய்ய சிவில் பாதுகாப்பு குழுக்களின் செயற்பாடு மீண்டும் அவசியம் எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் தமது பிரதேசங்களில் ஏற்படும் குழப்பசூழ்நிலைகள் மற்றும் பிரச்சனைகளை பொலிஸாருடன் இணைந்து தீர்த்துக்கொள்ளம் நோக்கிலேயே சிவில் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறுபவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல், 30000 வீடுகளை அமைக்கும் திட்டம் மற்றும் கொழும்பு நகரை அழகுபடுத்தல் தொடர்பாகவும் பாதுகாப்பு செயலாளர் இங்கு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சிவில் பாதுகாப்பு குழு தொடர்பான ஜனாதிபதியின் இணைப்பாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே, பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன், சிவில் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர திஸாநாயக்க மற்றும் மதத் தலைவர்கள் உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

2,000 கிமீ பாய்ந்து தாக்கும் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி!.

Friday, September 30, 2011
பாலாசூர்: முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அக்னி-2 ஏவுகணை, ஒரிசா மாநிலம் பாலாசூர் கடற்கரையில் உள்ள வீலர் தீவு மையத்தில் இன்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் அட்வான்ஸ்டு சிஸ்டம் லேபாரட்டரி, அக்னி-2 ஏவுகணைகளை உருவாக்கியது. இந்த ஏவுகணைகள் அணுகுண்டுகளை தாங்கியபடி 2000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரி இலக்கை தாக்கி அழிக்க கூடியவை. இந்த ஏவுகணைகள் ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

அக்னி-2 ஏவுகணைகள் 20 மீட்டர் நீளம், ஒரு மீட்டர் விட்டம் கொண்டவை. 17 டன் எடை கொண்டது. திட்டமிட்ட பாதையில் சென்று துல்லியமாக இலக்கை தாக்கும் திறன் படைத்தவை. இவற்றை ரயில், சாலை வழியாக எந்த இடத்துக்கும் எடுத்து செல்ல முடியும். இந்த அக்னி-2 ஏவுகணைகள் இன்று ஒரிசா மாநிலம் பாலாசூர் கடற்கரையில் உள்ள வீலர் தீவு சோதனை மையத்தில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. அக்னி-2 இலக்கை துல்லியமாக தாக்கியதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அக்னி-2 ஏவுகணையை கடந்த ஆகஸ்ட் 29ம் தேதியே சோதிக்க ராணுவத்தினர் திட்டமிட்டிருந்தனர். தொழில்நுட்ப கோளாறுகளால் கடைசி நேரத்தில் சோதனை தள்ளி வைக்கப்பட்டது. இப்போது சோதனை வெற்றி அடைந்துள்ளது.

தொம்பேயில் காவல்துறையினர் பொதுமக்கள் மோதல்:தொம்பே பொலிஸ் நிலையத்துக்கு வெளியே ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள்!

Friday, September 30, 2011
கம்பஹா தொம்பே காவல்துறை நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் மரணமானார்.

இதனையடுத்து தொம்பே காவல்துறை நிலையத்தின் மீது பொதுமக்களால் தாக்குல் நடத்தப்பட்டுள்ளது

இதன்போது பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக காவல்துறையினரின் பல வாகனங்கள் சேதமைடைந்தன

இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்

காவல்துறை பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அதிகாரி மெக்ஸி புரொக்டர் இதனை தெரிவித்துள்ளார்...

தொம்பே பொலிஸ் நிலையத்துக்கு வெளியே ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போது குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

45 இலங்கை மீனவர்கள் விடுதலை

Friday, September 30, 2011
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த 45 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 35 பேர் ஒக்டோபர் நான்காம் திகதி நாடு திரும்பவுள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களின் ஏழு படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டிருந்த மேலும் 10 மீனவர்கள் நாளை நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது இரண்டு படகுகளையும் தமிழக அதிகாரிகள் விடுவித்துள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விடுதலையான மீனவர்களையும் அவர்களது படகுகளையும் இந்தியக் கரையோர பாதுகாப்பு படையினர் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய இந்தியாவில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் எண்ணிக்கை 41 ஆக குறைவடையவுள்ளது.

இந்த மீனவர்களையும் அவர்களது எட்டு படகுகளையும் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

தென்ஆசியாவுக்கான உபகுழு தலைவர் யாழ். விஜயம்!:-US Congressman visits Jaffna

Friday, September 30, 2011
தென்ஆசியாவுக்கான உபகுழு தலைவர் யாழ். விஜயம்!

அமெரிக்கா காங்கிரஸின் மத்திய கிழக்கு மற்றும் தென்ஆசியாவுக்கான உபகுழு தலைவர் உட்பட்ட குழுவினர், நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சென்று திரும்பியுள்ளார்
இதன்போது அவர், யாழ்ப்பாண இராணுவ கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்



இதன்போது அவருக்கு யாழ்ப்பாண பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் யாழ்ப்பாண கட்டளை தளபதி விளக்கமளித்துள்ளார்.
இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்று வரும் அபிவிருத்தி பணிகள் குறித்து அமரிக்காவின் காங்கிரஸ் குழுவினர் திருப்தி வெளியிட்டுள்ளனர்.


US Congressman visits Jaffna!

Chairman, Subcommittee on middle East and South Asia, US House of Representative (Congressman) Mr. Steven Joseph Chabot during his one day visit to Jaffna on Wednesday (28) called on Commander Security Force - Jaffna Major Genaral Mahinda Hathurusinghe who briefed about prevailing security situation and other development activities taking place in post - conflict Jaffna.

Commander SF-J having received visiting US Congressman and the retinue, presented a detailed account on recently concluded resettlement programme and accelerated De-mining process in the peninsula.

During the cordial meeting, Major General Hathurusinghe explained them about government's development programmes and Army's involvement in Community project while ensuring security of Jaffna and the people. Members expressed their satisfaction about ongoing development in Jaffna.

Before they left for Colombo Mr. Steven Joseph Chabot and team members visited several places in Jaffna and met representatives of different societies.

Staff Director subcommittee on Middle East and South Asia, US House of representative, Washington D.C., Mr. Kevin William Pitzpatrick, Chief of Political Affairs, US Embassy, Dr. Paul carter, Political Officer, US Embassy, Mr. Jacob Chriqui were among the other team members.

Thanks Photos-Civil military coordination in Jaffna.

எட்டியாந்தோட்டை அலிவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

Friday, September 30, 2011
எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலிவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

அலிவத்தை பிரதேசத்தில் நேந்றிரவு 10 - 11 மணி அளவில் இரு குழுவினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் முற்றியதை அடுத்து அங்கு குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட குண்டு ஒன்றே வெடிக்க வைக்கப்பட்டதாக எட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது காயமடைந்த நபர் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பில் எட்டியாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ராஜீவ் கொலையாளிகளின் குற்றப் பின்னணி-எஸ்.புஷ்பவனம் (துக்ளக்)

Friday, September 30, 2011
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவருக்கு கருணை காட்ட வேண்டும் என்ற பிரசாரம், தொலைக்காட்சிகள் உதவியுடன் நடைபெறுகிறது. சாதாரணமாக ‘தமிழ் உணர்வாளர்கள்’ என்று அறியப்படுபவர்கள், தற்போது ‘மனித நேயக் காவலர்களாக’ அவதாரம் எடுத்துள்ளனர். இந்நிலையில், அந்த படுகொலையைப் பற்றிய சில விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யாழ்ப்பாண மேயர் கொலை வழக்கில் பிரபாகரன் சார்பாக வாதாடிய வக்கீல் எஸ்.நடராஜன், டெஸோ தலைவர் சிறி.சபாரத்தினம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் எம்.பி., E.P.R.L.F. ஜார்ஜ், P.L.O.T.E. வாசுதேவன், E.P.R.L.F. பத்மனாபா, கிருபன், யோக சங்கரி மற்றும் நால்வர் தவிர, ரஞ்சன் விஜயரத்னே, பிரேமதாசா, லக்ஷ்மண் கதிர்காமர், காமினி திசநாயகே, நீலம் திருச்செல்வன், அருணாசலம் தங்கதுரை, சாம் தம்பிமுத்து, சரோஜினி யோகேஸ்வரன், யாழ்ப்பாண மேயர்.... என்று பலர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்கள். தவிர விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மாத்தையா, கிட்டு உட்பட பலரும் கொல்லப்பட்டனர். இவர்களெல்லாம் யார்? இவர்களுக்கு எது பொதுவானது?

பிரபாகரனுக்குப் பிடிக்காத, அவருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்கள் என்ற காரணத்திற்காக இவர்கள் எல்லோரும் ‘துரோகி’ பட்டம் சூட்டப்பட்டனர். ஈவு இரக்கமின்றி, கோழைத்தனமாக, மனித நேயம் துளியும் இன்றி கொலை செய்யப்பட்டனர். இவர்களில் சிலரிடம் அவர்களின் விருந்தோம்பலை ஏற்றுக் கொண்டார்கள் விடுதலைப் புலிகள். நிராயுதபாணியாக இருந்தவர்களை ஒருவித விசாரணையுமின்றி விடுதலைப் புலிகள் கொன்ற பல தமிழர்களில் சிலர்தான் இவர்கள். (ரஞ்சன், காமினி, பிரேமதாஸா போன்றோர் சிங்களவர்கள்.)

பல தமிழ்க் குடும்பங்களிலிருந்து சிறுவர்களைக் கடத்திச் சென்று, கோழைத்தனமாக அவர்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, இலங்கை ராணுவத்தின் குண்டுகளுக்கு இரையாக்கினார்கள் விடுதலைப் புலிகள். பிரபாகரன் கொல்லப்பட்டதும் இக்குடும்பங்கள் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடின. இதுதான் விடுதலைப் புலிகளின் லட்சணம். இப்படிப்பட்டவர்கள்தான் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முறையாக விசாரிக்கப்பட்டனர். அவர்களுக்கு 10 வக்கீல்களை இந்திய அரசு அமைத்துக் கொடுத்தது. அந்த வக்கீல்களுக்கு ஃபீஸும் இந்திய அரசே வழங்கியது. 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 251 குற்றச்சாட்டுகள் பதிவாகின.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே 112 மனுக்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்தனர். எல்லாவற்றையும் பரிசீலித்துதான் தீர்ப்பு வழங்கப்பட்டது. 1993 மே 5– ல் பிராஸிகியூஷன் தனது தரப்பு வாதத்தைத் தொடங்கியது. 1994 ஜனவரி 19–ல் விசாரணை ஆரம்பமானது. ஆயிரத்திற்கும் மேலான ஆவணங்கள், சாட்சியங்கள் பரிசீலிக்கப்பட்டன. சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை 28.1.98 அன்று வழங்கியது;

மேல்முறையீட்டில் உச்சநீதி மன்றம் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு 11.5.1999 அன்று பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை. நளினியின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்றவர்கள் ஏற்கெனவே சிறையில் கழித்த காலத்தை தண்டனைக் காலமாகக் கருதி, விடுவிக்கப்பட்டனர். தமிழக ஆளுநர் நளினியின் கருணை மனுவை ஏற்று, அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். மற்றவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஆனால், பிரபாகரனால் துளிக்கூட மனித நேயம் இன்றி கொடூரமாகக் கொல்லப்பட்ட எண்ணற்ற தமிழர்களின் மரணத்தைப் பற்றி, மறந்தும் வாய் திறக்காத இந்த ‘மனித நேயக் காவலர்கள்’, இவ்வளவு முறையாக நடந்து நிறைவு பெற்ற வழக்கில் கொடுக்கப்பட்ட தண்டனையை, ‘மனித நேயமற்ற செயல்’ என்று கூறுவதும், தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பிரசாரம் செய்வதும் வேடிக்கை; வேதனை.

சிலர் பொய்ப் பிரசாரத்தின் உச்சத்திற்கே சென்று, “அந்த மூவரும் ‘அப்பாவிகள்’, சும்மா ஒரு பாட்டரி வாங்கிக் கொடுத்ததற்காக மரண தண்டனையா” என்று பேசுகிறார்கள்.

சில தினப் பத்திரிகைகளும் இப்பிரசாரத்திற்கு இடமளிக்கின்றன. ‘அப்பாவி’ என்று சொல்லப்படும் பேரறிவாளன், முருகன், சாந்தன் என்பவர்களின் பங்கு ராஜீவ் காந்தி படுகொலையில் என்ன என்பதை, கீழ்கண்ட குறிப்புகளின் மூலம் வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

அறிவு (எ) பேரறிவாளன்:

பிரபலமான விடுதலைப் புலி ஆதரவாளரின் மகன். பொது இடங்களில் கடை பரப்பி, கேசட், வீடியோ கேசட், பிரசுரங்கள், புத்தகங்களை விற்பனை செய்து, மற்றும் விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிக் கொடுப்பவர். விடுதலைப் புலித் தலைவர் பேபி சுப்ரமணியத்துடன் கள்ளத்தனமாக யாழ்ப்பாணம் சென்று 1990 மே முதல் நவம்பர் வரை தங்கியுள்ளார். அவர் விடுதலைப் புலிகளுடன் இருக்கும் வீடியோ படங்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் உள்ளன. ராஜீவ் காந்தியைக் கொல்வதுதான் திட்டம் என்பது தெரிந்தே முழு மூச்சாக விடுதலைப்புலி சிவராசனுக்கு உதவினார் பேரறிவாளன்.

பஜாஜ் மோட்டார் சைக்கிளை இவர் பெயரில் சிவராசனுக்கு வாங்கிக் கொடுத்தது, ஒயர்லஸ் செட்டுக்கு வேண்டிய பேட்டரியை வாங்கிக் கொடுத்தது, மனித வெடிகுண்டு தனுவின் உடம்பில் கட்டிய வெடிகுண்டை இயக்க, கோல்டன் பவர் பேட்டரியை வாங்கிக் கொடுத்தது எல்லாம் இவர்தான். படுகொலை நடந்த பின் செய்தித் தொடர்பு வேலையைச் செய்தவரும் இந்தப் பேரறிவாளன்தான். விடுதலைப் புலிகளின் மறைவிடத்திலிருந்து தூர்தர்ஷன் செய்திகளைப் பதிவு செய்து, யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவது இவருடைய முக்கிய வேலையாக இருந்தது. சுபா சுந்தரம் ஸ்டூடியோவிற்கு அடிக்கடி சென்று செய்திகளைப் பரிமாறிக் கொண்டு, திட்டம் தீட்டும் வேலையில் ஈடுபட்டார் இவர். முருகன் அவ்வப்போது இவர் வீட்டில் தங்குவார்.

முருகன்:

இவர் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர். இந்தப் படுகொலையை நடத்துவதற்காகவே, சிவராசன் தலைமையில் கோடியக்கரையில் வந்து இறங்கிய 9 பேர்களில் இவர் ஒருவர். வயர்லெஸ் செட் தொடர்பு, சிவராசனுக்குப் பல வகைகளிலும் உதவுவது, பணம் பட்டுவாடா செய்வது ஆகியவை இவரது பொறுப்புக்கள். நளினியைச் சந்தித்து அவர் மீது இவர் காதல் வயப்பட்டதால், பொட்டு அம்மன் இவரை யாழ்ப்பாணத்திற்குத் திரும்ப உத்தரவிட்டார். படகுக்காக கோடியக்கரையில் சில நாட்கள் காத்திருந்தார். அந்த நாட்களில் நளினியின் ஒத்துழைப்பு சிவராசன் குழுவுக்குக் கிடைப்பது வெகுவாகக் குறையத் தொடங்கவே, நளினியின் ஒத்துழைப்பு வேண்டுமென்றால், முருகன் இங்கு இருப்பது அவசியம் என்று கருதி, சிவராசன், முருகனைத் திரும்ப அழைத்தார்.

முருகன், யாழ்ப்பாணம் செல்லும் முன், இயக்கத்தின் முக்கியமான கடிதங்கள், ஆயுதங்கள், புத்தகங்கள் மற்றும் வரவு செலவுக் கணக்குகளை கோடியக்கரை சண்முகத்திடம் கொடுத்து, பத்திரமாக வைத்துக் கொள்ளச் சொன்னார். அதை சண்முகம் கடற்கரை மணலில் புதைத்து வைத்தார். சண்முகம் கைதானவுடன் அவை அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்தன; முருகனின் முழுப் பங்கும் வெளியானது.

இந்து மாஸ்டர் எனப்படும் முருகன்தான் நளினியை மூளைச் சலவை செய்து, ராஜீவ் காந்தி கொல்லப்பட வேண்டியவரே, அதற்காக எதையும் செய்யலாம் என்ற நிலைக்கு நளினியைக் கொண்டு வந்தவர்.

மே 7, 1991 அன்று வி.பி.சிங் கூட்டத்தில் நடந்த படுகொலைக்கான ஒத்திகையில் பேரறிவாளன், ஃபோட்டோ கிராபர் ஹரிபாபு, நளினி, சிவராசனுடன் முருகனும் பங்கேற்றார்.

முருகனின் மடிப்பாக்கம் வீட்டிலிருந்து வயர்லெஸ் செட்டுகளும், சங்கேத மொழிக்குறிப்பும் கைப்பற்றப்பட்டன. இவர் பிடிபட்டவுடன், சயனைட் சாப்பிட முயன்றார். அது தடுக்கப்பட்டு கைதானார்.

சாந்தன்:

சின்ன சாந்தன் என்கிற சுதேந்திர ராஜா, சிவராசனின் உதவியாளர். இவரும் விடுதலைப் புலிகளின் உளவுத் துறையைச் சேர்ந்தவர். சிவராசனுடன் மே 2–ல் சென்னைக்கு வந்து, அவருடன் ஜெயக்குமார் என்பவர் வீட்டில் தங்கியவர். ஃபோட்டோ கிராபர் ஹரிபாபுவுடனும் 1 வாரம் தங்கினார்.

மே 1– ஆம் தேதி சிவராசன் தலைமையிலான குழுவுடன் கோடியக்கரைக்கு வந்தார். சிவரூபன் போன்ற விடுதலைப் புலிகளை வேதாரண்யத்திலிருந்து திருச்சிக்கு அழைத்துச் சென்றவர் இவர். சிவராசனின் கூட்டாளிகளுக்குத் தகவல்களை எடுத்துச் செல்வது, பணப் பட்டுவாடா செய்வது, சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்வது, ஒரு மறைவிடத்திலிருந்து மற்றொரு மறைவிடத்திற்கு ரகசியமாக நபர்களை அழைத்துக் கொண்டு போவது போன்றவை இவரது வேலை.

1988–ல் அமைதிப் படையினரால் யாழ்ப்பாணத்தில் பிடிபட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டவர் இவர். 1990 பிப்ரவரியில் சிவராசன் பண உதவி செய்ய, சென்னை எம்.ஐ.இ.டி. கல்லூரியில் சேர்ந்தார். பத்மநாபா கொலையில் இவருடைய பங்கு முக்கியமானது. ஜக்கரியா காலனியில் EPRLF உடன் பழகி அவர்களது நம்பிக்கையைப் பெற்று, பத்மநாபாவின் நடவடிக்கைகளை கண்காணித்து, சிவராசனிடம் அவ்வப்போது சொல்லி, பத்மநாபா மற்றும் 7பேர் படுகொலை செய்யப்பட ஏற்பாடு செய்தவர்.

1991 ஏப்.28 அன்று சிவராசனுடன் பொட்டு அம்மனைச் சந்தித்தபோது, ராஜீவ் காந்தி படுகொலைத் திட்டம் பற்றி இவரிடம் விளக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர்தான் கொலை செய்யப்பட வேண்டிய இடம் என்று முதலில் சிவராசன் இவருக்குத்தான் சொன்னார். அதன்பின் ஏற்பாடுகள் இவருடையது. மரகதம் சந்திசேகரின் மகன் மூலம், ரூ.5 லட்சம் தேர்தல் நிதி கொடுத்து, மாலை போட அனுமதி வாங்கியதும் இவர்தான். படுகொலைக்குப் பிறகு, சிவராசன், நளினி, சுபாவுடன் ஆட்டோவில் ஏறி டிரைவர் அருகே உட்கார்ந்து சென்னைக்கு வந்தார். கத்திப்பாராவில் இறங்கிக் கொண்டார். சிவராசன் தப்பிக்க சிவராசனுக்கும், திருச்சி சாந்தனுக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தார். இதுதான் இவர்களுடைய பூர்வோத்ரம்.

இவை அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டவை. ராஜீவ் காந்தி கொலைச்சதியில் முக்கியப் பங்கு வகித்ததால்தான், இவர்களுக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

‘ராஜீவ் காந்தி உயிரோடிருந்தால் இவர்களை மன்னித்திருப்பார்’ என்கிறார் கருணாநிதி. இந்தப் பிதற்றலை துக்ளக் ஆசிரியர் சிறப்பாக நையாண்டி செய்திருந்தார். ராஜீவ் காந்தி உயிரோடு இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை நினைவு படுத்திப் பார்ப்போம். அவரது தாயார் 31 அக்.1984 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அப்படுகொலையில் சம்பந்தப்பட்ட சத்வந்த் சிங்குக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. அவருக்குத் தூக்கு வேண்டாம் என்று ராஜீவ் காந்தி சொல்லவில்லை! சத்வந்த் சிங் தூக்கிலிடப்பட்டார்.

சரி, ராஜீவ் காந்தியுடன் இறந்த மற்றவர்களின் குடும்பங்களுக்கு என்ன நீதி? ஒரு கொலை செய்யப்பட்டாலே, இறந்தவர்களின் குடும்ப வேதனையைக் காண்பிக்கும் தொலைக்காட்சிகள், இந்த 17 பேரின் குடும்பங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி ஏன் விவாதிக்கக் கூடாது? குண்டு வெடிப்பின்போது சுற்றி நிற்கும் பல அப்பாவிகளும் இறந்து போவார்கள் என்று, தெரிந்தே செய்யப்பட்ட தீவிரவாதச் செயல் இது.

இதில் பலியானவர்கள்

1. பி.கே.குப்தா, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அலுவலர்,
2. பி.கே. எஸ்.முகமது இக்பால், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.,
3. ராஜ குரு, பல்லாவரம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர்,
4. சி.எட்வர்ட் ஜோசப், சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்,
5. வி.எத்திராஜுலு, குன்றத்தூர் காவல்நிலைய எஸ்.ஐ.,
6. எஸ்.முருகன், சோமங்கலம் காவல்நிலைய கான்ஸ்டபிள்,
7. ஆர்.ரவிச்சந்திரன் (எஸ்.பி.சி.ஐ.டி. கமாண்டோ கான்ஸ்டபிள்),
8. தர்மன், காஞ்சிபுரம் ஸ்பெஷல் பிராஞ்ச் கான்ஸ்டபிள்,
9. திருமதி. சந்திரா, காஞ்சிபுரம் கான்ஸ்டபிள்,
10. திருமதி. லதா கண்ணன், அரக்கோணம்,
11. செல்வி. கோகில வாணி (லதா கண்ணனின் மகள்),
12. திருமதி. சந்தானு பேகம், திருமுல்லைவாயில்,
13. டரியல்பீட்டர் (கொலைக்குழு) திருமங்கலம், சென்னை,
14. செல்வி.சரோஜாதேவி, ஸ்ரீபெரும்புதூர்,
15. முனுசாமி (முன்னாள் எம்.எல்.சி., சென்னை),
16. தனு (விடுதலைப் புலி),
17. ஹரிபாபு (கொலைக் குழுவின் ஃபோட்டோ கிராபர், சென்னை)

இவர்களில் கொலைக் குழுவினரைத் தவிர மற்றவர்கள் உயிருடனோ, ஆவியாகவோ திரும்பி வந்தால், இந்த மூவரையும் மன்னித்து விடுவார்களா? அவர்களின் குடும்பங்கள்தான் மன்னிக்குமா?

மிகவும் பாராட்டப்பட்ட தீவிர புலனாய்வுக்குப் பின் 6 வருடங்கள் வழக்கு நடந்து, இரு தரப்பினருக்கும் அதன் பிறகே அனைத்து வாய்ப்புகளையும் வழங்கி, சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. அதை மறுபரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், இந்த மூவருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. பிறகு கருணை மனு கவர்னரால் தகுந்த காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. மற்றொரு கருணை மனு ஜனாதிபதியால் தகுந்த காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. இவ்வளவு நடந்த பிறகும் ‘இவர்களுக்கு தூக்குத் தண்டனை கூடாது; காலம் கடந்து விட்டது. இதற்கு சட்டத்தில் இடம் இல்லை’ என்று கூறுவதை மனசாட்சி உள்ளவர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

எஸ்.புஷ்பவனம் (துக்ளக்.

புலிகளின் செயற்பாடுகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும்-பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன்!

Friday, September 30, 2011
புலிகளின் செயற்பாடுகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.

புலிகளின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் புலிகள் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள் என்பதனை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் செயற்பாடுகள் குறித்து பிரித்தானிய காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

'உயர்ஸ்தானிகரிடம் கேளுங்கள்' என்ற வீடியோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியா மற்றும் ஐரோப்பா முழுவதிலும் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் 2001ம் ஆண்டு முதல் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுதல் குற்றச் செயலாகவே கருதப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இலங்கை பல்லினங்களின் நாடாக மாறாதவரை அபிருத்தியையோ, சமூக நல்லுறவையோ ஏற்படுத்த முடியாது-பத்திரிகை அறிக்கை:பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்!

Friday, September 30, 2011
இன்று வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வில் நிகழும் சொல்லொனா வேதனைகள் சவால்கள் இழப்புக்கள் என்பவற்றை எதிர்கொள்வதற்குஸ என்ன வழி என்பது இன்று எம் முன்னுள்ள முக்கிய கேள்வியாகும்.

இன்று அனுபவிப்பது போன்ற துன்பங்களை விடவும் மோசமான துன்பங்;களை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் அனுபவித்திருக்கிறார்கள்.

பழைய யாழ் சந்தை, யாழ் நூல் நிலையம் எரிக்கப்பட்டதிலிருந்து இன்றைய நில அபகரிப்பு மக்களின் அன்றாட வாழ்வில் இராணுவத் தலையீடு, கிரீஸ் பூதம் வரையிலான பிரச்சினைகளை அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதானால் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களும் நிலத்தின் மீதான அதிகாரங்களும், நீதித்துறை அதிகாரங்களும் கொண்ட அதிகாரப்பகிர்வு கட்டமைப்பு அவசியம். மாநில மட்டத்திலான அரச கட்டமைப்பிற்குள் இது அடங்க வேண்டும்.

மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட பொலிஸ் என்பது எப்போதும் பேரினவாத மேலாதிக்க மனோபாவத்துடனேயே நடந்து வந்திருக்கிறது.இதுவே பல சந்தர்ப்பங்களில் பிரச்சனைகள் தலைதூக்குவதற்கு காரணமாக இருந்திருக்கிறது.

திரும்பவும் மக்கள் மீதான ஆத்திரமூட்டல் சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்துவருகிறது. இத்தகைய போக்குகள் சமூகத்தை மேலும் மேலும் விரக்திக்கும், கோபத்திற்கு இட்டுச் செல்லவும் இதேபோல் வடக்கு கிழக்கில் நிலங்கள் அவற்றின் பயன்பாட்டு அதிகாரம் மாகாணத்துக்குரியதாக அமைய வேண்டும்.

தற்போது வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் காணிப்பதிவுகள் மக்கள் மத்தியில் பல்வேறுவிதமான சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இடம்பெயர்ந்து இலங்கையிலும் இந்தியாவிலும் அகதிகளாக வாழ்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான இயல்பு நிலை ஏற்படுத்தாத வரையில், அச்சநிலை முழுதாக நீங்காத நிலையில், அவசர அவசரமாக இத்தகைய காணிப்பதிவுகள் மேற்கொள்ளப்படுவது சொந்த ஊரிலேயே தம்மை சிறுபான்மையினராக ஆக்குவதற்காகவா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

சட்டம் ஒழுங்கு, காணி, நிதி,நீதி அதிகாரங்களை கொண்ட அதிகார கட்டமைப்பின் அவசியம் வடக்கு கிழக்கில் வரலாற்றின் தேவையாக அமைகிறது.

தவிர வடக்கின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கே சனத்தொகை கணக்கெடுப்பு உபயோகிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 30 வருடங்களில் மக்கள் புலம் பெயர்ந்து போனது அவர்களில் பெருந்தொகையானோர் திரும்பிவராத சூழ்நிலையில் பிரதிநிதித்துவ குறைக்கப்பட்டுள்ளது. இன்னொரு விதமாக பார்ப்போமானால் ஒரு சமூகத்தின் பேரழிவு அந்த சமூகத்திற்குரிய பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கான நியாயமாக்கப்பட்டிருக்கிறது.

யுத்தம் முடிவிற்கு வந்து சமூகங்களிடையே புரிந்துணர்வு சமாதானத்தை ஏற்படுத்துவதென்பது அந்த அழிவுக்கு உட்பட்ட சமூகத்தை மீளெழுச்சி கொள்ள வைப்பதும், அச் சமூகத்திற்குள்ள சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் என்பவற்றை உறுதிப்படுத்துவதும் ஆகும்.

ஐ.நா சபைக்கும் அண்டை நாட்டுக்கும் அரசாங்கம் மீள் குடியேற்றம் சமூகங்களிடையே புரிந்துணர்வு அபிவிருத்திப்பற்றி கூறி வருகின்றது.

வடக்கு கிழக்கில் நில ஆக்கிரமிப்புக்களும் இராணுவமயமாக்கலும், நாடாளுமன்ற பிரதிநிதித்துவ குறைப்பும், கிரீஸ் பூதங்களும், காணிப்பதிவுகளும் சமூகங்களிடையே புரிந்துணர்வுக்கு மாறாக பேரினவாத அகந்தையை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றன. உண்மைகள் துருத்திக் கொண்டிருக்கின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உலகளவிலும், பிராந்தியளவிலும் பேசப்படுகிறது. நிலம்,பொலிஸ், நிதி, நீதி அதிகாரங்களை வென்றெடுப்பதிலேயே தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு பாதுகாப்பான நிலையை ஏற்படுத்த முடியும். சிங்கள தலைவர்களுடன் மாத்திரமல்லாமல் முஸ்லீம், மலையக தலைவர்களுடனும் இவைபற்றி பேசப்பட வேண்டும்.

பல்லினங்களின் நாடாக இலங்கை மாற்றப்படுவதிலேயே உண்மையான புரிந்துணர்வு. சமூக, பொருளாதார அபிவிருத்தியும் ஏற்பட முடியும்

தி. ஸ்ரீதரன்
பொதுச்செயலாளர்
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்

அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் - வைத்தியர் பலி!

Friday, September 30, 2011
அம்பலாங்கொடை, கரன்தெனிய நகரில் இனந்தெரியாத நபரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத நபரினால் நேற்றிரவு 10 மணியளவில் இந்த துப்பாக்கிக் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கரன்தெனிய வைத்தியசாலையில் சேவையாற்றிய வைத்தியர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

வைத்தியர் தனது மருந்தகத்தில் இருந்த போதே துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து கனடா பகிரங்க அதிருப்தி வெளியிடடுள்ளது!

Friday, September 30, 2011
இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து கனடா பகிரங்க அதிருப்தி வெளியிடடுள்ளது. எதிர்வரும் மாதம் அவுஸ்திரேலியாவில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் முதல் தடவையாக இலங்கையின் மனித உரிமை விவகாரம் குறித்து கனடா நேரடியாக விமர்சனம் செய்துள்ளது.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பிலும் திருப்தியடைய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக மனித உரிமை விவகாரம் குறித்து அதிலும் இலங்கை விவகாரம் குறித்து கனடா தொடர்ச்சியாக குரல் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து இலங்கை இடைநிறுத்தப்பட வேண்டுமென கனேடிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கிரியாஜியன்ஸ் கோரிக்;கை விடுத்துள்ளார்.

இதேவேளை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், யுத்த வலயத்தில் நல்லிணக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும், பக்கச்சார்பான முறையில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் அடுக்கபபட்டு வருவதாகவும் இலங்கை அரசாங்கம் விசனம் வெளியிட்டுள்ளது.

சவேந்திர சில்வாவிற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு குறித்து கருத்து வெளியிட முடியாது-அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது!

Friday, September 30, 2011
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி நிரந்தரப் பிரதிநிதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு குறித்து கருத்து வெளியிட முடியாது என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த வழக்கு விசாரணை தொடர்பில் ஊடகவியலாளர்கள் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலாண்டிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அமெரிக்க மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது இதனால் கருத்து வெளியிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டச் சிக்கல்கள் காணப்படுவதனால் குறித்த கேள்விக்கு பேச்சாளர் நூலாண்ட் பதிலளிக்கவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு இராணுவத் தளபதி கேணல் ரமேஷின் மனைவி வத்சலாதேவியினால், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இதேவேளை, சவேந்திரா சில்வா இராஜதந்திர வரப்பிரசாதங்களினால் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொதுநலநாய நாடுகள் அமைப்பு இரண்டாக பிளவடையக் கூடும் என இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது!

Friday, September 30, 2011
பொதுநலநாய நாடுகள் அமைப்பு இரண்டாக பிளவடையக் கூடும் என இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியன தொடர்பில் ஆணையாளர் நாயகம் ஒருவரை நியமிக்கும் திட்டத்திற்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

பொதுநலவாய அமைச்சுத் திட்டக் குழுவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும், இந்த யோசனைத் திட்டம் உறுப்பு நாடுகளுக்கு தண்டனை வழங்கும் வகையில் அமையக் கூடும் என இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பினை வலுப்படுத்தக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமே தவிர புதிய அமைப்புக்களை அமைப்பதில் ஆர்வம் காட்ட வேண்டிய அவசியமில்லை என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாரிய மனித உரிமை மீறல் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தக் கூடிய வகையில் புதிய ஆணையாளர் ஒருவரை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மீது அதீதமான அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலம் பாதக விளைவுகள் ஏற்படக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அளவுக்கு மேல் அழுத்தங்களை பிரயோகித்து துரித கதியில் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் மனித உரிமை விவகாரம் தொடர்பிலான ஆணையாளர் ஒருவரை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் - குற்றவாளிக்கு மரணதண்டனை!

Friday, September 30, 2011
19 வயது பாடசாலை மாணவியை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட ஒருவருக்கு மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி சிசிர குமார திஸாநாயக்க இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு மே 26 ஆம் திகதி மாணவியை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்ததாக பிரதிவாதிக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்நதது.

இதேவேளை அளவ்வ பகுதியில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபசார விடுதி நடத்தியதாக ஒன்பது பெண்கள் கைது!

Friday, September 30, 2011
விபசார விடுதி நடத்தியதாக ஒன்பது பெண்கள் கைது
மருதானை டெக்னிக்கல் சந்தியில் விபசார விடுதியொன்றை நடத்திச் சென்றதாகக் கூறப்படும் விடுதியின் உரிமையாளரான பெண் உட்பட, ஒன்பது பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் வலஸ்முல்ல, ராகம, ஹட்டன் மற்று்ம பேலியகொடை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்ஸி ஃப்ரொக்டர் தெரிவிக்கிறார்.

பயங்கரவாத தடைச் சட்ட விதிமுறையினை ஆட்சேபித்து மனுதாக்கல் - மாவை.எஸ்.சேனாதிராஜா!

Friday, September 30, 2011
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சரினால் அறிவிக்கப்பட்ட குறித்த விதிமுறைகளை ஆட்சேபித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.எஸ்.சேனாதிபதி ராஜா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மக்களின் நலனை கருத்திற் கொண்டு இந்த மனுவை தாக்கல் செய்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் 27 ஆம் சரத்தின் முதலாவது பிரிவிற்கமைய அந்த சட்டத்தை செயற்படுத்துவது தொடர்பாக சட்டத்தின் கொள்கைகளுக்கு அமைவான விதிமுறைகளை அமுல்படுத்துவதற்கான அதிகாரம் பாதுகாப்பு அமைச்சருக்கு உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த விதிமுறைகள் அரசியில் அமைப்பிற்கு அமைவானதாக இருக்க வேண்டும் என்பதுடன் நீதிமன்றத்தினால் ஆராயப்பட்டிருக்க வேண்டும் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பின் பிரகாரம் மக்களுக்கு கிடைத்துள்ள சில உரிமைகள் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளால் மீறப்படுவதாக மனுதாரர் கூறியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ள குறித்த விதிமுறைகள் காரணமாக அரசியல் அமைப்பு மீறப்படுவதாக உத்தரவிடுமாறு மனுதாரர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வீசா கலாவதியான மற்றும் சட்ட விரோதமான முறையில் தொழில்களில் ஈடுபடும் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படலாம்-பிரித்தானியா!

Friday, September 30, 2011
அதிகளாவன இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.

வீசா கலாவதியான மற்றும் சட்டவிரோதமான முறையில் தொழில்களில் ஈடுபடும் இலங்கையர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பிரித்தானிய காவல்துறையினர் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாரத்தில் நான்கு இலங்கை சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

சுவிஸ், ஆஸ்திரியாவுக்கு இன்று ஜனாதிபதி பிரதிபா பயணம்!

Friday, September 30, 2011
புதுடில்லி : ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், எட்டு நாள் அரசு முறைப் பயணமாக, இன்று சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். முதலில் சுவிட்சர்லாந்து செல்லும் ஜனாதிபதி பிரதிபா, அங்கு அக்டோபர் 4ம் தேதி வரை தங்கியிருந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் உட்பட பல விஷயங்கள் குறித்து, அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதுதவிர, இரு தரப்பு பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கிறார். சுவிட்சர்லாந்து பயணம் முடித்து, அக்டோபர் 4ல் ஆஸ்திரியா செல்லும் பிரதிபா, அங்கு 7ம் தேதி வரை தங்கியிருப்பார். அங்கு, இரு தரப்பு உறவுகள் உட்பட பல விஷயங்கள் குறித்து, அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ஜனாதிபதியுடன் இந்தியத் தொழில் வர்த்தக சபை சம்மேளனத்தின் தலைவர் கே.கே.மோடி தலைமையிலான 45 பேர் கொண்ட வர்த்தகக் குழுவும் செல்கிறது. அத்துடன், மத்திய பார்லிமென்ட் விவகார இணை அமைச்சர் ராஜிவ் சுக்லா மற்றும் எம்.பி.,க்கள் சிலரும் உடன் செல்கின்றனர். ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின் போது, சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என, வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறினார். சுவிட்சர்லாந்தில் தங்கியிருக்கும் போது, காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி, ஜெனிவாவில் உள்ள காந்தி சிலைக்குச் சென்று அஞ்சலி செலுத்துவார்.

ஆயுத போராட்டங்களை கைவிட வேண்டுமென புலிகள் அமைப்பின் முன்னாள் ஆயுத முகவர்:தற்போது கனடாவில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும்-சதாஜன் சாராசந்திரன்!

Friday, September 30, 2011
ஆயுத போராட்டங்களை கைவிட வேண்டுமென புலிகள் அமைப்பின் முன்னாள் ஆயுத முகவர்:தற்போது கனடாவில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும்-சதாஜன் சாராசந்திரன்!

யுத போராட்டங்களை கைவிட வேண்டுமென புலிகள் அமைப்பின் முன்னாள் ஆயுத முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சதாஜன் சாராசந்திரன் என்பவரே கடிதமொன்றின் மூலம் தமிழ் இளைஞர் யுவதிகளிடம் இந்த பகிரங்க கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

சதாஜன் தற்போது கனடாவில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஆயுதங்களை ஏந்தி தமிழ் இளைஞர் யுவதிகள் தவறிழைக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

புலிகளுக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருந்த போது சதாஜன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலர் தம்மை பிழையாக வழிநடத்தியதாகவும், தேவையற்ற வகையில் வன்முறை உணர்வுகளைத் தூண்டி விட்டதாகவும் இதனை எண்ணி தாம் வேதனைப் படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குரோத உணர்வுகளையோ வன்முறையையோ யாரும் ஆதரிக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைச்சாலையில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

புலிகள் அமைப்பு இல்லை என்ற யதார்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சதாஜன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதலான உதவிகளை வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் சிறந்த ஆளுமையினால்தான் தமிழ் இளைஞர்களுக்கு புதுவாழ்வு கிடைத்தது-புலிகளின் முன்னாள் போராளி சசிகுமார்!

Friday, September 30, 2011
ஜனாதிபதி அவர்களின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது. என்னைப் போன்ற எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தினால் தவறான வழியில் இட்டுச் செல்லப்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகளை புனர்வாழ்வளித்து விடுவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் சசிகுமார் கூறினார்.

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தில் இருந்த போதுதான் அனுபவித்த துன்பங்களைப்பற்றி விபரித்த அவர்; “ஜனாதிபதி மஹிந்த ராஜ்பக்ஷ அவர்கள் தனது வாழ்வுக்கு வழிகாட்டுவார்” என்று நம்பிக்கை வெளியிட்டார்.

எல்ரீ.ரீ.ஈ இயக்கத்தினால் பல்வேறு துன்பங்களை அனுபவித்து மயிரிழையில் உயிர்தப்பிய இரண்டு தமிழ் இளைஞர்கள் நேற்று தினகரன் காரியாலயத்திற்கு வந்து ஆசிரிய பீடத்தினரிடம் மனம் விட்டு உரையாடினார்கள்.

முதலில் நாம் ஹோமாகமவை பிறப்பிடமாகக் கொண்ட 21 வயது குமாரவேல் சசிகுமாருடன் பேசினோம். அவர், தன்னுடைய சோகக் கதையை இவ்விதம் எடுத்துரைத்தார்.

“எனது தந்தையின் மரணத்திற்கு பின்னர் எனது படிப்பை தொடருவதற்கு ஹோமாகமையில் இருந்த பிரச்சினைகள் காரணமாக எனது தந்தையின் நண்பர் ஒருவர் மன்னாருக்கு அழைத்துச் சென்றார். அப்போது எனக்கு வயது 12 இருக்கும்.

திருமணத்தின் பின்னர், எனது பெற்றோர் வவுனியா சிதம்பரபுறத்திலேயே வாழ்ந்தார்கள். ஆயினும், சில காலம் எனது தாயார் எனது பாட்டியாருடன் ஹோமாகமையில் இருந்தபோதே நான் பிறந்தேன்.

பிறகு மன்னாரில் இருந்து கொழும்பு செட்டியார் தெருவுக்கு வந்து பொற்கொல்லர் தொழில் பயிற்சியை சில காலம் பெற்றேன். அங்கு ஒரு சிறு பிரச்சினை ஏற்பட்டதால் சிலரின் உதவியுடன் 2002ல் யாழ்ப்பாணம் சென்றேன்.

பின்னர் இவ்விதம் பிரச்சினைகளால் 2006ல் விஸ்வமடுவிலுள்ள தனது நண்பனின் திருமண வீட்டுக்கு வந்தேன். அதையடுத்து பாதை மூடப்பட்டது. அந்தக்காலகட்டத்தில் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் போராளிகளை சேர்த்துக் கொண்டிருந்தது. என்னையும் பலவந்தமாக அமைப்பில் இணைத்துக் கொண்டனர். பின்னர் எனக்கு பலவந்தமாக யுத்தப் பயிற்சியை எல்.ரீ.ரீ.ஈயினர் கொடுத்தார்கள்.

பின்னர் எல்.ரீ.ரீ.ஈ. போராளிகளுடன் மன்னார் முழங்காவில் பிரதேசத்திற்கு யுத்த முனைக்கு அனுப்பப்பட்டேன். நாச்சுக்குடா யுத்தத்தில் நான் படுகாயமடைந்தேன். அதையடுத்து நான் போராட முடியாத நோயாளியாகி கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றேன்.

யுத்தம் முடிவடையும் கட்டத்தில் நான் எல்.ரீ.ரீ.ஈ. போராளிகளிடமிருந்து தப்பி வந்து பொதுமக்களுடன் ஒன்றாகக் கலந்து அரசாங்க பக்கத்திற்கு இராணுவத்திடம் சரணடைந்தேன். அங்கு இராணுவத்தினர் எங்களை துன்புறுத்தவில்லை. அன்போடு பராமரித்து புனர்வாழ்வளித்து என்னையும் மற்றவர்களையும் விடுவித்தனர்.

எனக்கு அப்போது 18 வயதாக இருந்ததால், என்னை அவர்கள் சிறுவர் போராளிகளாகவே மதித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவித்தனர். இன்று நான் ஒரு சுதந்திரப் பிரஜையாக கொழும்பிலும் நாட்டின் எந்தப் பிரதேசத்திற்கும் செல்லக்கூடியதாக இருக்கிறது. இதற்கு நானும் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

இன்று வாழ்க்கை நடத்த முடியாத பொருளாதார கஷ்ட நிலையில் இருக்கும் எனக்கு ஜனாதிபதி அவர்கள் தொழில் வாய்ப்பொன்றை பெற்றுக் கொடுத்து உதவி செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.”

நாடுகடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் விடுதலை!

Friday, September 30, 2011
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் நேற்று சி. ஐ. டி.யினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மெக்ஸி புரொக்டர் தெரிவித்தார்.

புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட 50 இலங்கையர்களையும் நாட்டுக்கு திருப்பி அனுப்ப பிரித்தானிய அரசு தீர்மானித்திருந்தது. இதன்படி அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட 42 ஆண்களும் 8 பெண்களும் நேற்று காலை 10.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இலங்கையை வந்தடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இவர்களிடம் பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கான விஸா இல்லாததால் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் சி. ஐ. டி.யினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்...

பிரித்தானியாவிலிருந்து இன்று நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.குற்றப் புலனாய்வுப் பிரிவினால் அவர்களிடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்ட பின்னரே விடுவிக்கப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்ஸி புரக்டர் தெரிவித்தார்.

புலிகளின் பொறுப்பற்ற செயலால் நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்தோம்-எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குணசிங்கம் விசாகன்!

Friday, September 30, 2011
புலிகள் இயக்கத்தில் இருந்த போது ஷெல் தாக்குதலில் காயமடைந்து ஊனமடைந்திருந்தாலும் உறுதியுடன் இருக்கிறேன். புலிகளின் பொறுப்பற்ற கண்மூடித்தனமான நடவடிக்கைகளினால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்றார் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குணசிங்கம் விசாகன் (28 வயது).

புலிகளில் இருந்த போது பல்வேறு துண்புறுத்தல்களுக்குள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பிய இவர், நேற்று தினகரன் ஆசிரியர் பீடத்துக்கு வந்திருந்தார். அவர் கூறியவற்றை இங்கே தருகிறோம்; 28 வயதான குணசிங்கம் விசாகன் நல்ல உடற்கட்டுடன் இருக்கும் ஒரு துடிப்பான இளைஞன்.

எனினும் இந்த பயங்கரவாத யுத்தம் செய்த கோர விளைவினால் இவர் தனது வலது கையின் முழங் கைக்கு மேற்பகுதியை இழந்துள்ளார். இவரது இடது கையின் மூட்டுச் சிரட்டையும் நொருங்கியிருப்பதனால் அவருக்கு இடது கையையும் சரியாக இயக்க முடியாது துன்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்.

இவரது பிறப்பிடம் யாழ்ப்பாணமாக இருந்தாலும் இவர் கிளிநொச்சிக்கு 1995ம் ஆண்டு இடம்பெயர்ந்து 2000ம் ஆண்டில் எனது உறவினரின் காணியில் தோட்டம் செய்து கொண்டிருந்தேன். எனக்கு அக்காலப்பகுதியில் ஷெல் ஒன்று விழுந்தமையினால் தனக்கு பெரும் காயங்கள் ஏற்பட்டதாக கூறினார்.

ஒருவிதத்தில் நான் இவ்விதம் ஷெல் தாக்குதலினால் காயமடைந்து ஊனமடைந்தது நல்லதென்றே நினைக்கிறேன் என்று கூறிய அவர், நான் மட்டும் காயப்படாதிருந்தால் என்னையும் எல்.ரீ.ரீ.ஈயினர் பலவந்தமாக தங்கள் போராளியாக சேர்த்து பலிக்கெடாவாக்கியிருப்பார்கள். இவ்விதம் நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர்கள் எல்.ரி.ரி.ஈயின் இந்த பொறுப்பற்ற கண்மூடித்தனமான நடவடிக்கையினால் உயிர்த்தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விதம் துன்பத்தில் ஆழ்ந்திருந்த எனக்கு அப்போது வயது 19. நான் ஊனமுற்று தனித்து வாழ முடியாதிருந்த போது என்னை சந்தித்த ஒரு பெண் என்னை மணம் முடித்து கணவனாக ஏற்றுக்கொண்டு எனக்கு வாழ்வளிக்கும் தியாகத்தைச் செய்தாரென்று கூறிய இந்த இளைஞன் தற்போது இரட்டை குழந்தைகளுடன் எல்லாமாக தனக்கு 4 ஆண் பிள்ளைகள் இருப்பதாகவும் ஒரு கையை இழந்த எனக்கு ஆண்டவன் 8 கைகளை கொடுத்திருக்கிறார் என்றார்.

இன்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கிற எனக்கு ஜனாதிபதி அவர்களும், அரசாங்கமும் உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்

ஜே.வி.பியின் உட்கட்சி விவகாரங்களில் அரசு ஒருபோதும் தலையிடாது-கெஹலிய ரம்புக்வெல்ல!


Friday, September 30, 2011
ஜே.வி.பியின் உட்கட்சி விவகாரங்களில் அரசு ஒருபோதும் தலையிடாது. அவர்களே அதனை தீர்த்துக் கொள்ள வேண் டும். எனினும் துப்பாக்கி கலாசாரமொன்று இலங்கையில் மீண்டும் தலை தூக்குவதற்கு மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.

என அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.ஜே.வி.பியினரின் பிளவு மற்றும் உட்பூசல்கள் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் கெஹலிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்துள்ள புபுது ஜயகொட பத்திரிகையொன்றுக்கு எழுதியிருந்த கட்டுரையொன்றில் "இந்த நாட்டில் ஆயுத துப்பாக்கி கலாசாரத்துக்கு இடமில்லை என்று கூறியிருந்தார். இதில் மறைமுகமாக அடுத்த தரப்பினர் அதற்கு ஆயத்தமாவதை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

எது எப்படியிருப்பினும் இந்த நாட்டில் மீண்டும் ஒரு துப்பாக்கி கலாசாரத்துக்கு இடமில்லை. மக்கள் அனுமதிக்கப் போவதும் இல்லை என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

கடந்த காலங்களில் காடுகளில் புகுந்து இவ்வாறான ஆயுதக் கலாசாரத்தால் சுமார் 60,000 இளைஞர்கள் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மீண்டும் காடுகளுக்குள் நுழைய இடமளிக்கவும் முடியாது. இவ்வாறு செல்ல முற்படுபவர்களை தடுத்து நல்வழிக்கு கொண்டு வருவதும் எமது பொறுப்புகளில் ஒன்று.

ஜே.வி.பியினுள் பிளவுபட்டுள்ள எந்தப் பிரிவினரை அரசு ஆதரிக்கிறது என செய்தியாளர் ஒருவர் கேட்ட போது,

யாரை ஆதரிக்கிறோம் என்பது அரசின் பொறுப்பல்ல. அது அரசின் வேலையும் அல்ல. தேர்தல் ஆணையாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சியை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

ஜே.வி.பியின் பிளவுக்கு வெளிநாட்டு சக்திகள் பின்னணியில் இருப்பதாக கூறுகின்றார்களே? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

இவ்வாறு தெரிவித்துள்ளவர்களிடமே இந்தக் கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும். எம்மைப் பொறுத்தவரையில் வெளிநாட்டு சக்திகள் என்பது வெரும் கட்டுக்கதையே தவிர வெறொன்றும் இல்லை. ஜே.வி.பி.யின் பிளவுக்கு அரசும் பின்னணியில் செயற்படுவதாக கூறுகிறார்களே? எனக் கேட்கப்பட்டபோது;

கூறுவதற்கு எதுவும் இல்லாத நிலையில் இவ்வாறு தெரிவிப்பது பற்றி அரசு கவலைப்படவில்லை.

இருப்பினும் எமது கட்சிக்குள் எவரும் வரலாம். எவரும் போகலாம். ஜனநாயக உரிமையின் உச்சத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசு கடைப்பிடிக்கிறது.

ஜனநாயகத்தின் உச்சம் என்று சொல்லும் நீங்கள் கட்சி தாவுவதற்கு எதிரான சட்டத்தை நீக்குவதற்கு ஏன் பாராளுமன்றத்துக்கு கொண்டுவர மறுக்கிaர்கள் என செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

இந்தச் சட்டம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரவில்லை என கட்சி மாறுவதற்கு எந்த தடையும் இப்போது இருப்பதாக எனக்கும் தெரியவில்லை. கட்சி மாறிய நான் இதற்கு உதரணம். எனக்கு எதுவும் நடக்கவில்லையே என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட 6 இலங்கையர்கள் சார்ஜாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்!

Friday, September 30, 2011
கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட 6 இலங்கையர்கள் சார்ஜாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சார்ஜாவில் உள்ள 14 வர்த்தக நிலையங்களில் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மடிக்கணணி, கையடக்க தொலைபேசி, கடிகாரம் என்பன கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

புதையல் தோண்டியவர்கள் கைது!

உடப்புசல்லாவ ரூபஹ ஓயா பகுதியில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் 10 பேர் நேற்று மாலை பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் புதையல் தோண்டுவதற்காக சந்தேகநபர்கள் பயன்படுத்திய உபகரணங்களுடன் முச்சக்கர வண்டியொன்றையும் பொலிஸார் கையப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்களை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

Thursday, September 29, 2011

COLOMBO WALL ஒவியத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி!

Thursday,September, 29, 2011
கொழும்பு:உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவ மாணவிகளால் வரையப்பட்டுள்ள ஆசியாவிலலேயே மிக நீளமான COLOMBO WALL ஒவியத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று பார்வையிட்டார்.

1.5 கிலோமீற்றர் நீளமான COLOMBO WALL ஓவியத்தை வரையும் நடவடிக்கை கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமானது.

பேர வாவி அருகிலுள்ள இந்த ஓவியத்தினை மேல் மாகாணத்தின் 140 பாடசாலைகளைச் சேர்ந்த இரண்டாயிரம் மாணவ மாணவிகள் வரைந்துள்ளனர்.

ஓவியத்தை பார்வையிட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மாணவ மாணவிகளுடனும் கலந்துரையாடினார்.

10 ஆண்டுகளுக்குப் பின்னர் கொழும்பு மாநகரம் எவ்வாறு காட்சியளிக்கும் என்ற தமது கற்பனையை இந்த மாணவ மாணவியர் தமது ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று காலை அமைதியான தபால்மூல வாக்களிப்பு!

Thursday,September, 29, 2011
கொழும்பு:இன்று காலை நடைபெற்ற தபால்மூல வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றதாகவும் எதுவித வன்முறைகளும் இடம்பெறவில்லை என்றும் பெப்ரல் அமைப்பின் இயக்குநர் ரோஹன ஹெட்டியாரச்சி எமது இணையத்துக்குத் தெரிவித்தார்.

17 மாநகர சபைககள்- ஒரு நகரசபை மற்றும் 5 பிரதேச சபைகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணிவரை நடைபெற்றது.

பெப்ரல் அமைப்பினால் 63 வாக்களிப்பு நிலையங்கள் கண்காணிக்கப்பட்டதாகவும் இயக்குநர் தெரிவித்தார். வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது முதல் இன்று வரை 65 வன்முறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கு ஏற்ப யாழ்ப்பாணத்துக்கு புதிய பொலிஸ் நிலையக் கட்டடம்!

Thursday,September, 29, 2011
கொழும்பு:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கு ஏற்ப யாழ்ப்பாணத்துக்கு புதிய பொலிஸ் நிலையக் கட்டடம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கு ஏற்ப யாழ்ப்பாணம் பருத்தித்துறை மற்றும் பியகமை ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு பதிதாகக் கட்டடங்கள் அமைக்கப்பட உள்ளன.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதற்கான அமைச்சரவைப்பத்திரத்தை சமர்பித்திருந்தார்.
இதற்கு 549 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

நிர்மானப்பணிகளின் 60 வீதத்தை இவ்வருடம் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

4வது நாளாக காஷ்மீரில் துப்பாக்கி சண்டை:உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது!

Thursday,September, 29, 2011
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் கிராலிபோரா பகுதியில் கடந்த திங்கள்கிழமை தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற¢பட்ட துப்பாக்கி சண்டை, இன்று 4வது நாளாக நீடித்து வருகிறது. துப்பாக்கி சண்டையில் காயமடைந்த ஜவான் ஒருவர் நேற்றிரவு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதை தொடர்ந்து இந்த துப்பாக்கி சண்டையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டம் கிராலிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கடந்த திங்கள்கிழமை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை ராணுவத்தினர் மற்றும் போலீசார் சுற்றி வளைத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது.

கடந்த 3 நாட்களில் 5 தீவிரவாதிகள், இரண்டு போலீசார், ஒரு ராணுவ உயர் அதிகாரி பலியானார்கள். ஜவான் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இவர், நேற்றிரவு உயிரிழந்தார். 4 வது நாளாக சண்டை இன்று நீடித்தது. லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த 7 தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருக்கலாம் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.